கண்ணிகள் அகற்றும் பணிக்கு ஜப்பான் 7 இலட்சம் டொலர் உதவி
மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளிலிருந்து இடம்பெய ர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக அப் பகுதிகளில் மிதிவெடிகள், கண்ணிவெடிகளை அகற்றுவதற் கென ஜப்பான் அரசு ஏழு இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
மிதிவெடிகள், கண்ணிவெடிகளை அகற்றும் சுவிஸ் நிறுவனத்துக்கு இலங்கை நாணயப்படி 80 மில்லியன் ரூபாவை ஜப்பான் அரசு வழங்கியுள்ளது.
வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கில் ஜப்பான் அரசு இலங்கையில் மிதிவெடிகள், கண்ணிவெடி களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு 2003 ஆம் ஆண்டு முதல் சுமார் 2,050 மில்லியன் ரூபாவை (சுமார் 18 மில்லியன் அமெ ரிக்க டொலர்கள்) இது வரை வழங்கியிருக்கிறது.
மேற்படி ஏழு இலட்சம் அமெரிக்க டொலர்களை மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமை ச்சினூடாக வழங்கும் நிக ழ்வு நேற்று வெள்ளிக்கி ழமை நடைபெற்றது.
ஜப்பானிய தூதரகத்தின் சார்பில் காஒரு ஷிமசாகி மற்றும் மிதிவெடிகள் அகற்றும் சுவிஸ் அமைப்பின் திட்ட முகாமையாளர் மார்க் பெனட், மிதிவெடிகள் அகற்றும் செயற்திட்டக் குழுவின் தலைவர் எம். எஸ். ஜயசிங்க உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment