ஏ 9 பாதை திறந்ததன் சமூக, பொருளாதார நன்மைகள்
யாழ்ப்பாணத்துக்கு ஏ 9 பாதையூடாக உணவு பொருட்களைக் கொண்டு சென்ற லொறி கள் யாழ்ப்பாண உற்பத்திப் பொருட்களு டன் அங்கிருந்து திரும்பத் தொடங்கிவிட் டன. முதற்கட்டமாக 12 லொறிகள் நேற்று வெலிசறை களஞ்சியத்தை வந்தடைந்தன.
48250 கிலோ சின்ன வெங்காயம், 1300 கிலோ பீட்றூட், 5000 கிலோ இறால் வற் றல், 5000 கிலோ கருவாடு ஆகிய பொரு ட்கள் இந்த லொறிகளில் கொண்டு வரப் பட்டன.
ஏ 9 பாதைக்கூடாக அத்தியாவசியப் பொருட்கள் தென்னிலங்கையிலிருந்து யாழ் ப்பாணத்துக்கும் யாழ்ப்பாண விளைபொ ருட்கள் தென்னிலங்கைக்கும் கொண்டு செல்லப்படும் நடைமுறை இரு பகுதிக ளையும் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த நன்மை பயப்பதென்பதையும் அரசாங்கம் ஆரம்பி த்த மனிதாபிமான இராணுவ நடவடிக் கையின் விளைவாகவே இந்த நன்மை கிடைத்துள்ளதென்பதையும் இங்கு சுட்டிக் காட்டாதிருக்க முடியாது.
இரண்டரைத் தசாப்த காலமாக இந்த நன்மையை மக்கள் அனுபவிக்க முடியவி ல்லை. யாழ்ப்பாண விவசாயிகளும் மீன வர்களும் தங்கள் பொருட்களை இரண்ட ரைத் தசாப்த காலமாகத் தென்பகுதிக்கு அனுப்ப இயலாதிருந்ததால் அவர்கள் பொரு ளாதார ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி னார்கள். இம் மக்களின் விடிவுக்காகப் போராடுவதாகக் கூறி வந்த புலிகளே யாழ் ப்பாண விவசாயிகளுக்கும் மீனவர்களுக் கும் பொருளாதார ரீதியான பின்னடைவு ஏற்பட்டதற்கு முழுமையான பொறுப் பாளிகள்.
ஏ 9 பாதைக்கூடான போக்குவரத்து தடை ப்பட்டதற்குப் புலிகளைத் தவிர வேறு யாரையும் பொறுப்பாளிகளாக்க முடியாது. இப்பாதைக்கூடான போக்குவரத்து தடை ப்பட்டதால் வடபகுதி மக்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகினார்கள். அத்தி யாவசியப் பொருட்களின் விலைகள் அதி கரித்தன. உற்பத்திப் பொருட்களைத் தெற் குக்கு அனுப்ப இயலாததால் அவற்றின் உற்பத்தி குறைந்து தனிநபர் பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலியது. தென்னில ங்கை மக்களின் நாளாந்த வாழ்க்கையி லும் இப்போக்குவரத்துத் தடை பாதிப்பை ஏற்படுத்தியது. யாழ்ப்பாண உற்பத்திப் பொருட்கள் கொழும்புச் சந்தைக்கு வராத தால் அப் பொருட்களின் விலைகள் இங்கு அதிகரித்தன.
ஏ 9 பாதையில் போக்குவரத்தைத் தடை செய்து மக்களுக்குத் துன்பத்தை விளை வித்த புலிகள் இரண்டு தசாப்த காலப் போராட்டத்தின் பின் மக்களுக்கு அரசி யல் ரீதியாக நன்மை கிடைக்க வழி செய் திருக்கின்றார்களா என்றால் அதுவுமில்லை. இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டு நாட்டில் அமைதி நிலவுவதே மக்களுக்கு அரசியல் ரீதியான நன்மை. பொருளாதார நன்மையும் இல்லை. அரசியல் ரீதியான நன்மையும் இல்லை. எனவே புலிகள் நட த்திய போராட்டம் மக்களின் விமோசனத் துக்கான போராட்டமல்ல.
நீரைப் பருகும்போது அதன் சுவையை நினைவுகூர வேண்டும் என்று ஹோசி மின் கூறினார். ஏ9 பாதை திறக்கப்பட்ட தால் வட பகுதி மக்கள் மாத்திரமன்றித் தென்பகுதி மக்களும் பலனடைகின்றனர். அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கையி னால் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் விளைவே இந்த நன்மை என்பதை நாம் அனைவரும் நினைவுகூரவேண்டும்.
ஏ9 பாதை திறக்கப்பட்டதன் மூலம் மக் களின் சமூக, பொருளாதார வாழ்வில் பல அனுகூல மாற்றங்கள் இடம்பெறு கின்றன. வடபகுதி விவசாயிகளினதும் மீனவர்களினதும் வாழ்வில் பொருளாதார வளர்ச்சி. வட பகுதிப் பொருட்கள் தென் னிலங்கைக்கு வருவதால் உணவுப் பொரு ட்களின் விலையில் வீழ்ச்சி. வடக்கிலும் தெற்கிலும் வாழும் உறவினர்களின் சமூ கத் தொடர்புகளில் அபிவிருத்தி. இனங்க ளுக்கிடையிலான உறவின் வளர்ச்சி. இவை புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக் கையின் உடனடிப் பலன்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment