இந்திய மருத்துவக் குழுவினரின் பணி ஆரம்பம்
இலங்கை வந்திருக்கும் இந்திய மருத்துவக் குழுவினர் தமது கடமைகளை இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலை, புல்மோட்டைப் பகுதியிலுள்ள கனியப்பொருள் மணல்க் கூட்டுத்தாபன வளாகத்திலேயே இந்த வைத்திய நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 57 பேர் கொண்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் குழு இணைந்தே வைத்திய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்திய மருத்துவக் குழுவினர் கடந்த 9ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment