இலங்கைத் தமிழர் விவகாரம் இந்தியா-அமெரிக்கா ஒருமித்த கருத்து: சிவசங்கர் மேனன்
இலங்கையின் மூன்று தசாப்தங்களாக நீடித்து வரும் இன முறுகலுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் யதார்த்தபூர்வமாக அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென இந்திய வெளியுறவுச் செய்லாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுச் செயலர் அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே இந்தக் கருத்தை முன்வைத்தார்.
உக்கிரமடையும் யுத்தம் நடைபெறும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை விரைவில் ஏற்படுத்த வேண்டுமென அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
சிறுபான்மைத் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது முதன்மையானதென அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் சரியான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் வரையில் தேசிய இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதென அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் இலங்கை விவகாரம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது தெரிய வந்ததாகவும் சிவசங்கர் மேனன் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment