இந்து முறையில் இறுதிச் சடங்கு இன்று பிரிட்டன் முடிவு தெரியும்
பிரிட்டனில் இந்து முறைப்படி இறுதி சடங்கு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான சட்டதிருத்தம் தொடர்பான வழக்கு விசாரணை, அந்நாட்டு மேல் கோர்ட்டில் இன்று நடக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த இது தொடர்பான நீதி விசாரணையின் போது, நீதிபதி ஆண்ட்ரூ காலின்ஸ் கூறுகையில்," இவ்வழக்கு அதிகளவிலான முக்கியத்துவம் பெற்றுள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி, இந்த நீதி விசாரணையை ஐகோர்ட் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
பிரிட்டனில் தற்போது இந்து முறைப்படி, திறந்த வெளியில், தகனம் செய்வதற்கு அனுமதி கிடையாது. எனவே பிரிட்டனில் வாழும் பல இந்து குடும்பங்கள், இறந்து போன தங்கள் உறவினர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து தகனம் செய்கின்றனர். பிரிட்டனில், கடந்த 1930ம் ஆண்டு முதல் திறந்த வெளியில் செய்யப்படும் இறுதி சடங்கு சட்ட விரோதமானது. இது தொடர்பாக, பிரிட்டன் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என ஆங்கிலோ- ஆசியன் பிரண்ட்ஷிப் சொசைட்டி பிரசாரம் செய்து வருகிறது. இந்த அமைப்பின் நிறுவனர் தேவேந்திர குமார் காய்(70), பிரிட்டன் ராயல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணை இன்று நடக்கிறது.
இதுகுறித்து நியூகாசில் பகுதியை சேர்ந்த தேவேந்திர குமார் காய் கூறியதாவது:நான் எனது வாழ் நாள் முழுவதும் இந்து முறைப்படி வாழ்ந்துள்ளேன். அவ்வாறே இறக்கவும் விரும்புகிறேன். இதற்காக நகர்ப்புற மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள தகன மேடைகளால், பொதுமக்களுக்கு பாதிப்பு வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நேர்மை, சகிப்புத்தன்மை மற்றும் சுதந்திரம் போன்ற மதிப்பு மிக்க பிரிட்டன் பண்புகளில் எனக்கு விசுவாசம் உள்ளது. என்னால் உண்மையான இந்துவாக இறக்க முடியவில்லை என்றால், பிரிட்டனின் மதிப்பு மிக்க பண்புகள் இறந்ததாக அர்த்தம். இவ்வாறு தேவேந்திர குமார் காய் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment