குண்டடிப்பட்டு வந்த தம்பதியினர் விடுதலைப்புலிகளா என விசாரணை
இவர்களில் குண்டடிப்பட்ட நிலையில் காந்தரூபன்(29) கல்யாணி(23) இருந்தனர். இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி குவாரன்டைன் முகாமில் வைத்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். "கடந்த ஆண்டு முல்லைத்தீவில் "கிபீர்' என அழைக்கப்படும் குண்டுகளை இலங்கை விமானப்படை வீசிய போது கல்யாணியின் இரண்டு கைகள், முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த இருவாரத்துக்கு முன் ராணுவம் சுட்டதில் கடைக்குச் சென்ற காந்தரூபனின் இடது கையில் குண்டடி பட்டுள்ளது. "காதலர்களான இருவரும் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டு அகதிகளாக தமிழகம் வந்திருப்பதாக' தெரிவித்தனர். இவர்களை செங்கல்பட்டு முகாமுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை கியூ பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து குண்டடிப்பட்டு வந்த தம்பதியினர் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையிலிருந்து நான்கு குடும்பத்தைச் சேர்ந்த 13 அகதிகள் படகில் புறப்பட்டு கடந்த 21ம் தேதி நாகப்பட்டினம் கடல் பகுதியில் வந்திறங்கினர். போலீசாரின் விசாரணைக்குப் பின் 22ம் தேதி இரவு மண்டபம் அகதிகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment