சகோதரனின் தகவல் தெரியாத நிலையில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை- யாழ்ப்பாணத்தில் சம்பவம்
வன்னியில் உள்ள தனது சகோதரன் குறித்த தகவல் தெரியாத நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கண்டி வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துரைராசா கணேஷ் (வயது 57) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
வன்னியில் மத போதகருக்கான கல்வி கற்றுவரும் தனது சகோதரர் தொடர்பில் எந்தவிதமான தகவலும் இல்லாத நிலையில் மன உளைச்சலுடன் இவர் காணப்பட்டதாகவும் சகோதரனைப் பற்றியே பேசி கொண்டிருந்ததாகவும் மரண விசாரணையில் அவர் மனைவி தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment