இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று சந்திப்பு
இலங்கைப் பிரச்சிiனை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்துப் பேசுகிறார்.
இந்தச் சந்திப்பு இன்று புதுடில்லியில் இடம்பெறும்.
இதேவேளை, வடக்கில் யுத்தம் இடம்பெறும் பகுதிக்கு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென இலங்கை
அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்புடையதன்று. அரசியல் தீர்வின் மூலமே பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு காணமுடியுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment