தலீபான்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்:அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் மதச்சர்வாதிகாரம் நடத்திய தலீபான் தீவிரவாதிகளை தேர்தல் அரசியலுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு உள்ளது.
தலீபான்களுடன் மோதல் போக்கை கைவிட்டு அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள அமெரிக்கா தீர்மானித்து உள்ளது. இதனால் அவர்களை தேர்தல் அரசியலில் ஈடுபடுத்த திட்டமிட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் வில்லியம் வுட் மாற்றப்பட்டு இருக்கிறார். அவர் நிருபர்களிடம் பேசுகையில், “எல்லா போர்களையும் போல, தீவிரவாதச்செயல்களும் உடன்பாடு ஏற்படும்போது முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும். ஆகவே தலீபான்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அல்லது தேர்தலில் அவர்கள் போட்டியிடவும் வகை செய்ய அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அவை துப்பாக்கி மூலம் பதவியை பிடிப்பதை விட வேறானது” என்று குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment