காசநோய் குணப்படுத்த கூடியதொன்று
உலக காசநோய் தினம் இன்றா கும். முன்னொரு காலத்தில் மனிதனின் உயிரைக் குடிக்கும் நோய்களில் ஒன்றாக காசநோயும் இருந்தது. ஆனால் காசநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் இந்நோயின் அச்சம் மக்கள் மத்தியில் நீங்கி விட்டது.
காசநோயை முற்றாகக் குணப்படுத்துவ தற்குரிய மருந்துகள் இன்று உள்ளன. தொட ர்ச்சியாக ஆறு மாத காலத்துக்கு மருந்து களை உட்கொண்டு வந்தால் காசநோயை முற்றாகக் குணப்படுத்தி விட முடியும்.
காசநோய்க்குரிய மருத்துவம் எமது நாட்டில் இலவசமாகக் கிடைக்கிறது. நாட் டிலுள்ள எந்தவொரு வைத்தியசாலைக்கும் சென்று காசநோய்க்கான மருத்துவ பரிசோ தனையை மேற்கொள்ளவும் மருத்துவ சிகிச்சையைப் பெறவும் வசதிகள் உள்ளன.
மருத்துவ சிகிச்சையை நாடாத நோயாளி களும் மருந்துகளை கிரமமாக உட்கொள்ளத் தவறுவோருமே நோயின் தாக்கத்துக்கு ஆளாக நேரிடுகிறது.
எனவே காசநோயென்பது உயிராபத்து மிகுந்த நோயென்ற எண்ணத்தையும் இந் நோயைக் குணப்படுத்த முடியாதென்ற அவ நம்பிக்கையையும் நோயாளிகள் தங்களிடமி ருந்து அகற்றிக்கொள்வது முக்கியம்.
ஆனாலும் காசநோய் தொடர்பான கவலை தரும் தகவலொன்று சமீபத்தில் வெளியாகி யிருக்கிறது.
உலகெங்கும் சமீப காலமாக இந்நோய் மீண்டும் தீவிரமடைந்திருப்பதே அத்தகவல் ஆகும்.
காசநோயைக் குணப்படுத்தும் மருத்துவம் இலகுவாகி விட்ட போதிலும் இந்நோய் உலகெங்கும் அதிகரித்து வருவது சர்வதேச சுகாதார அமைப்புகளின் கவனத்தை ஈர்த்து ள்ளது.
தொழில் வாய்ப்பு, அசாதாரண சூழ்நிலை போன்றவற்றால் உண்டான மக்கள் இடம் பெயர்வினால் உருவாகும் நெருக்கம் மிகுந்த வாழ்வு முறையினால் காசநோய் இலகு வாகப் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
மக்களின் இடம்பெயர்வுக்கு தற்போதைய காலப் பகுதியில் எந்தவொரு நாட்டையும் விதிவிலக்காகக் கொள்ள முடியாது. யுத்த சூழ்நிலைக்கு அப்பால் தொழில்வாய்ப்பு மற்றும் வாழ்க்கைப் போட்டி போன்றவை காரணமாக நெரிசல் மிகுந்த வாழ்க்கை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் காற்றினால் பரவும் காச நோயானது மக்களுக்கு இலகுவாகத் தொற்றிக் கொள்கிறது. இதுவே உலகில் இந்நோயா ளர்கள் அதிகரித்து வருவதற்குக் காரணமா கும்.
இலங்கையில் தற்போது சுமார் பதினே ழாயிரம் பேர் காசநோயினால் பீடிக்கப்பட் டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின் றன. இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேசமயம் வருடாந்தம் எட்டாயிரத் துக்கும் பதினோராயிரத்துக்கும் இடைப்பட் டோர் எமது நாட்டின் வைத்தியசாலைகளில் காசநோயாளர்களாகப் பதிவு செய்யப்படு கின்றனர்.
காசநோயானது அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியதல்ல. பதினைந்து வயதுக்கும் நாற்பத்தைந்து வயதுக்கும் இடைப்பட்ட பருவத்திலேயே இந்நோய் பெரும்பாலும் தாக்கத் தொடங்குகிறது.
அதேசமயம் நோயின் அறிகுறி சற்றேனும் தென்படாத ஒருவரின் உடலில் கூட காச நோய்க் கிருமி இருக்கக் கூடுமென மருத் துவர்கள் கூறுகின்றனர்.
ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்ற வேளையில் காசநோய் வீரியம் பெறுகிறது.
எனவேதான் இவ்விடயத்தில் மக்கள் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென டாக்டர்கள் கூறுகின்றனர்.
நோயினால் பீடிக்கப்பட்ட ஒருவர் தும் முவதன் மூலம் நோய்க் கிருமிகள் மற்றைய வருக்கு சுவாசத் தொகுதி வழியாகத் தொற் றிக் கொள்கின்றன.
மக்கள் கூடுகின்ற இடங்களிலேயே நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. மக்கள் கூடும் இடங்களைத் தவிர்ப்பது சாத்தியமா னதல்ல. அதேசமயம் காற்றினால் பரவும் நோய்க் கிருமியிலிருந்து தப்பிக் கொள்வதும் முடியுமானதல்ல. ஆனாலும் இனங்காணப் பட்ட நோயாளி ஒருவருடன் பழகும் போது அவதானத்துடன் இருப்பது முக்கியம்.
நோயின் ஆரம்ப நிலையை அறிந்து கொண்டு உரிய மருத்துவ சிகிச்சையை நாடு வதும் பிரதானம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment