இரட்டைக் குழந்தைகளை பிரசவிக்கும் உலகின் முதலாவது ஆண்மகன்
உலகிலேயே இரட்டைக் குழந்தைகளைப் பிரசவிக்கும் முதலாவது ஆண் என்ற பெருமையை ஸ்பெயினைச் சேர்ந்த ரூபென் நோ கொரோனாடோ பெறவுள்ளார்.
பெண்ணாக பிறந்து பால் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் ஆணாக மாறியுள்ள ரூபென் (25 வயது), இரட்டை சிசுக்களை கருத்தரித்துள்ளதாகவும் எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் குழந்தைகளைப் பிரசவிக்கவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பால் மாற்று சிகிச்சையின்போது தனது பெண் இனவிருத்தி உறுப்புகளை ரூபென் அகற்றாமை காரணமாகவே அவரால் கருத்தரிப்பது சாத்தியமானது எனக் கூறப்படுகிறது. முன்னைய காதல் தொடர்பொன்றின் மூலம் இரு குழந்தைகளுக்கு தாயான ரூபெனின் காதலிக்கு மேலும் குழந்தைகளைப் பெறுவது சாத்தியமில்லை என மருத்துவர்கள் கூறியதையடுத்தே, ரூபென் தானே கர்ப்பந் தரித்து குழந்தைகளைப் பிரசவிக்க திட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பால் மாற்று சிகிச்சைக்குட்பட்ட ஒருவர் கருத்தரிப்பது ஸ்பெயினில் இதுவே முதல் தடவையாகும். அதேசமயம் அத்தகைய ஒருவர் இரட்டைச் சிசுக்களை கருத்த?ப்பது உலகில் இதுவே முதல் தடவையாகும்.
Ruben Noe Coronado Jimenez (left) has become Spain's first pregnant
transsexual.
பால்மாற்று சிகிச்சையை மேற்கொண்ட அமெரிக்கரான தோமஸ் பீற்றி (35 வயது), கடந்த வருடம் ஜூன் மாதம் பெண் குழந்தையொன்றைப் பிரசவித்தார். அதே சமயம் அவர் விரைவில் தனது இரண்டாவது குழந்தையையும் பிரசவிக்கவுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment