அரசாங்கமும், புலிகளும் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் : ஜோன் ஹோம்ஸ்
இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் அப்பாவிச் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகளுக்கான மனிதாபிமான விவகாரங்களக்கான விசேட பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்னர் சிட்டி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த செவ்வியின் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"மோதல் தவிர்ப்பு வலயத்தில் இலங்கை அரசாங்கம் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன் மீது தாக்குதல் நடத்துவதாக எமக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் விவாதம் நடத்தப்படுவதனை சில நாடுகள் எதிர்த்து வருவது ஆச்சரியமாக உள்ளது" என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment