பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்கள் தப்பிச்செல்ல தயார் நிலையில் 11 படகுகள்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அவ்வியக்கத்தின் ஏனைய தலைவர்கள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்லவென தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய 11 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போதே பிரிகேடியர் நாணயக்கார இந்த தகவல்களை வெளியிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
""விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பிச் செல்லவென ஜீ.பி.எஸ். கருவிகள், விமான எதிர்ப்பு ஏவுகணை, உயர் சக்திமிக்க தொடர்பாடல் போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட 6 படகுகளும் மற்றும் உணவுப் பொருட்களடங்கிய 5 படகுகளும் தயார் நிலையில் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அது மட்டுமல்லாது, பொதுமக்கள் படகுகள் மூலம் (வெள்ளமுள்ளி வாய்க்கால் ஊடாக) தப்பி வருவதை தடுக்கும் முகமாக படகுகளை தீயிட்டு எரிக்குமாறும், அழிக்குமாறும் புலிகளின் தலைமைப் பீடத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், விடுதலைப்புலிகள் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 7 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். டபிள் கெப் வாகனமொன்றும், 2 மோட்டார் சைக்கிள்களும் இதன்போது பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிநபர்களை பாவித்து 4 தற்கொலைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. இச் சம்பவங்களினால் சில படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் சிலர் காயமடைந்த போதும், புலிகளுக்கு அவர்களது இலக்கை அடைய முடியாமல் போய்விட்டது.
அத்துடன், இரட்டைக்கால்வாய் பகுதியில் புலிகளின் வசமிருந்த 700 மீற்றர் தூரமான மண் அணையும் படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதேநேரம், வாகனமொன்றுக்கு 6 டயர்களைக் கொண்ட புலிகளின் இரு கவச வாகனங்களும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன' என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment