புலிகளின் பிடியிலிருந்த 30,000 பொதுமக்களை ராணுவத்தினர் மீட்டுள்ளனர் (படங்கள் இணைப்பு)
இராணுவத்தின் 11வது காலாற்படை, கெமுனு வொட்ச் 9, கஜபா ரெஜிமன்ட் 8, விசேட படையணி மற்றும் இராணுவக் கொமாண்டோப் படையணி ஆகியன இணைந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை பாதுகாப்பு வலயமான புதுமாத்தளன் பகுதியில்
விடுதலைப் புலிகள் அமைத்திருந்த மண் அணையின் இரண்டரைக் கிலோ மீற்றரைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த மண் அணையை உடைத்துச் சென்ற இராணுவத்தினர் பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் பலவந்தமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 30,000 பொதுமக்களை மீட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment