அமெரிக்காவில்; சவப்பெட்டியை விட உயரமாக இருந்ததால் கால்கள் வெட்டப்பட்டு சவப்பெட்டியில் அடைப்பு
அமெரிக்காவில் மரண மடைந்த மதபோதகர் சவப்பெட்டியை விட உயரமாக இருந்ததால் கால்களை வெட்டி சவப்பெட்டியில் அடைத்த சம்பவம் கரோலினா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
தெற்கு கரோலினாவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹைனல். இவர் 6 அடி 5 அங்குலம் உயரம் உள்ளவர். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு இறந்துபோனார்.இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை தொழிலாகச் செய்யும் கம்பனியிடம் அவரது உடலை அடக்கம் செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது.
அந்த நிறுவன ஊழியர்கள் கொண்டு வந்த சவப்பெட்டியில் அவர் உடல் அடங்கவில்லை. இதனால் அந்த கம்பனியின் ஊழியர்கள் அவரது முழங்காலுக்கு கீழே உள்ள பகுதியை வெட்டி எடுத்துவிட்டு அவர் உடலை சவப்பெட்டிக்குள் அடைத்தனர். வெட்டப்பட்ட கால்களையும் சவப்பெட்டிக்குள் போட்டு மூடினர்.அதன் பிறகு உடலை அடக்கம் செய்தனர்.
உடல் அடக்கம் செய்யும் நேரத்தில்தான் குடும்பத்தினர் சவப்பெட்டியை பார்த்தனர். அப்போதே அது வழக்கமான அளவில் இருப்பதைப்பார்த்து சந்தேகம் கொண்டனர். இருந்தாலும் கால்களை வெட்டி இருப்பார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை.
5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அந்த நிறுவன முன்னாள் ஊழியர் கால்கள் வெட்டப்பட்டு சவ அடக்கம் செய்த விபரத்தை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜேம்ஸின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது தான் அவர் கால்கள் வெட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment