முகாம்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்க்க அனுமதியில்லை
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை அவர்களின் உறவினர்களோ அல்லது மதத் தலைவர்களோ சென்று சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லையெனக் கூறப்படுகிறது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 180,000ற்கும் அதிகமான மக்கள் வவுனியா, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
“எனினும், இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருப்பவர்களை உறவினர்களோ அல்லது மதகுருமாரோ சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இவ்வாறு அனுமதி மறுக்கப்படுகிறது” என யாழ் மறைமாவட்ட ஆயரின் செயலாளர் ராஜநாயகம் ஜெநோல்டன் விஜின்டஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இடம்பெயர்ந்துவரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் முகாம்களில் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முகாம்களிலுள்ளவர்களைப் பார்வையிடுவதற்கு உறவினர்கள் பலர் விரும்புகின்றபோதும் அனுமதி வழங்கப்படுவதில்லையெனவும், உறவினர்களைச் சந்திக்கும் ஆர்வத்தில் பலர் முகாம்களுக்கு அருகில் சென்று வருவதாகவும் பிராந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், வன்னியிலிருந்த உறவினர் உயிருடன் இருக்கிறார்களா அல்லது எந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அறிந்துகொள்ளமுடியாத நிலையில் இடம்பெயர்ந்தவர்களின் உறவினர்கள் பலர் தினமும் முகாம்களுக்கு சென்று வெளியே நின்று உறவினர்களைத் தேடுவதாக எமது யாழ் பிராந்தியச் செய்தியாளர் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment