புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களுக்கு களயதார்த்தம் தெரியாது: தயாமாஸ்டர்
புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களுக்கு வன்னியின் உண்மையான களயதார்த்தம் தெரியாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளத் தயாமாஸ்டர் ரூபவாஹினித் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் கூறினார்.
உண்மையான களயதார்த்தத்தை அறிந்துகொள்ளாமலே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் சார்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
“ஐரோப்பாவிலிருக்கும் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் வன்னியின் களநிலைவரங்களை அறிந்துகொள்ளாமல் விடுதலைப் புலிகளின் சார்பில் ஆர்ப்பர்டடங்களை நடத்திவருகின்றனர். அவர்கள் வன்னிக்கு விஜயம் மேற்கொண்டால் அங்கு மக்கள் படும் உண்மையான கஷ்டங்களை அறிந்துகொள்வார்கள்” என தயாமாஸ்டர் தனது செவ்வியில் கூறினார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியேற முற்பட்ட 200 அப்பாவித் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தயாமாஸ்டர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டரும், முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறும் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேற முற்பட்ட மக்கள் பலர் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டதாக அங்கிருந்து வெளியேறிய சிலர் எமக்கு உறுதிப்படுத்தியிருந்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment