புலிகளுக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகை தொலைத் தொடர்பு சாதனங்கள் தமிழகத்தில் மீட்பு: நால்வர் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கடத்தப்படுவதற்காகத் தயார் நிலையிலிருந்த தொலைத் தொடர்புச் சாதனங்கள்,மருத்துவ உபகரணங்கள் போன்றனவற்றை தமிழக கியூ பொலிஸ் பிரிவினர் கைப்பற்றியதுடன் இது தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்களாவர். ஜெயந்தன், ஜெயநாதன் ஆகியோரே இலங்கையைச் சேர்ந்தவர்களாவர். ஜெயநாதன் என்பவர் பிரிட்டனில் குடியுரிமை பெற்ற இலங்கைப் பிரஜையாவார்.
ஏனைய இருவருமான பாபு,குகன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து சட்டடைல் தொலைபேசிகள் 25, ஒரு ஜி.பி.எஸ் சாதனம், இரவு நேரத் தொலைத் தொடர்புக் கருவிகள், வோக்கி டோக்கிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.






0 விமர்சனங்கள்:
Post a Comment