பிரபாகரனின் ஆடம்பர கார் பறிமுதல்
இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆடம்பரமான குண்டு துளைக்காத லிமோசின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பெரிய பங்களா ஒன்றின் அருகே சேதமடைந்த நிலையில் அந்தக் கார் பறிமுதல் செய்யப்பட்டதாக இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இதே போன்றதொரு ஆடம்பரமான கார் சேதமடைந்த நிலையில் முல்லைத்தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆடம்பாரமான காரின் அருகே எரிந்த நிலையில்மேலும் சில கார்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராணுவத்துடனான போரில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் விடுதலைப் புலிகளே தங்களது கார்களை சேதப்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ராணுவ செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)






0 விமர்சனங்கள்:
Post a Comment