வங்கிச் சேமிப்பில் 1,00,000 டொலர் இருந்தும் வறுமையில் வாடி இறந்த நபர்
வங்கியில் தனது பெயரில் 1,00,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணம் வைப்பிலிருந்தும், வீடுவாசலற்று அநாதையாக தெருவோரத்தில் வறுமை நிலையில் வாழ்ந்து ஒருவர் இறந்த பரிதாப சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.
1993 ஆம் ஆண்டு தனது பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்த மேற்படி நபர், தனது நிஜப்பெயரை மறந்தமை காரணமாக அவரால் வங்கியிலிந்து பணத்தை மீளப்பெற முடியாது போனதா கக் கூறப்படுகிறது.
தென் கொரியாவில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் பிரகாரம் வங்கிக் கணக்குகளை போலிப் பெயர்களில் ஆரம்பிப்பது தடை செய்யப்பட்டது முதற்கொண்டு மேற்படி நபரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.
சிறு வயதில் தான் பிறந்த வேளையில் சூட் டப்பட்ட பெயரை அந்நபர் ஞாபகப்படுத்தி அதனை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தவறியமையே அவரது கணக்கு முடக்கப்படுவதற்குக் காரணமென யொங்பொங் மாவட் டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகா?யான யூஜுன்ஸூ தெரிவித்தார்.
மேற்படி நபர் தனக்கென சொந்த வீட்டை வாங்கிக் கொள்ளும் முகமாகவே இந்த சேமிப்புக் கணக்கை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
தனது சொந்தச் சேமிப்பை மீளப்பெற முடியாத நிலையில் அந்நபர் வீதியில் வண்டிலுக்குக் கீழே பிளாஸ்டிக் விரிப்புகளை விரித்து உறங்கியதாகவும் தொடர்ந்து கப்பல் கொள்கலனொன்றை வசிப்பிடமாக மாற்றிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment