புலிகளின் தலைவர்கள் பாதுகாப்பாக சரணடைவதற்கு உத்தரவாதம் வழங்க இலங்கை அரசுமறுத்துவிட்டது ஐ.நா.அதிகாரி விஜய்நம்பியார் சொல்கிறார்
தமிழீழ விடு தலைப் புலிக ளின் அரசியல் பிரிவுத் தலை வரான பா. நடே சன், சமாதான செயலகப் பணிப் பாளர் புலித் தேவன் ஆகி யோர் பாதுகாப் பாக சரணடை வது குறித்து உத் தரவாதம் வழங்க முடியாது என இலங்கை அரசாங்கம் கூறியதாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தலைமை அதிகாரி விஜய்நம்பியார் தெரிவித்துள் ளார்.இது தொடர்பாக "தி அவுஸ்திரேலியன்" பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இரு வர் சரணடைய விரும்பும் தகவலை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் தெரி விக்குமாறு பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் மூலமும் பிரிட்டிஷ் இராஜதந்திரியொ ருவர் மூலமும் தாம் கோரப்பட்டதாக விஜய்நம்பியார் "தி வீக்கென்ட் அவுஸ்திரேலியன்" பத்திரிகைக்கு தெரிவித்தார். இந்தத் தக வலை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிக் குமாறு ஏனைய இராஜதந்திரிகள் ஆலோ சனை கூறியதாகவும் அதன்படி இலங்கை அரசாங்க அதிகாரிகளிடம் இதைத் தெரிவித் ததாகவும். அதற்கு "காலம் கடந்திருக்க லாம். நாங்கள் அதுபற்றிப் பார்ப்போம்" என பதில் கிடைத்தது என அவர் கூறினார்.
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பா ளர் பாலசிங்கம் நடேசனும் சமாதான செய லகத்தின் தலைவரான சீவரட்ணம் புலித் தேவனும் யுத்தத்தின் கடைசித் தினங்க ளில், தாமும் தமது குடும்பத்தினரும் சரண டைவது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட உதவி நிறுவனங்கள் மற்றும் இராஜ தந்திரிகளுக்கு பல தொலைபேசி அழைப் புகளை மேற்கொண்டதாகத் தெரியவரு கிறது.
இதேவேளை அவர்கள் சரணடைய விரும்புவதாக ஐரோப்பாவைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமான்றின் மூலம் தனக்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹொகன உறுதிப்படுத்தினார். ஆனால் இது தொடர்பாக நம்பியாருடனோ வேறு இராஜதந்திரிகளுடனோ தாம் கலந்து ரையாடல் எதையும் நடத்தவில்லை என வீக்கென்ட் அவுஸ்திரேலியனிடம் அவர் கூறினார். குறித்த அரச சார்பற்ற நிறு வனத் திடமிருந்து கிடைத்த தகவலுக்கு வழக் கமான சரணடைதல் நடைமுறைகளை பின்பற்றுமாறு அவர்களிடம் கூறுமாறு பதி லளித்தாகவும் அவர் கூறினார்.
இந்தத் தகவலை வேறு எவருக்கும் தான் பரிமாறவில்லை எனவும் அந்த நேரத்தில் சரணடைவது குறித்து தன்னுடன் தொடர்பு கொள்வது பிரயோசனமான வழியாக இருக் காது எனக் கருதுவதாகவும் குறித்த நபர்கள் இருவரும் படையினரால்சுடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் ஆனால் அவர்கள் தமது சகாக்களி னாலேயேசுடப்பட்டிருக்கலாம் என நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த இவரும் தாம் சரணடைய விரும்பும் தகவலை இலங்கை இராணுவத்துக்கு தெரிவிக்கும்படி தம்மை கோரியதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங் கம் உறுதிப்படுத்தியுள்ளது. அவ்விருவரும் இறுதியாக ஞாயிறன்று இரவுதொடர்பு கொண்டதாக இராஜதந்திரிகளும் அதிகாரிக ளும் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் திங்கட்கிழமை காலை இந்த சரணடை தல் தொடர்பாக அறிக்கையொன்றை விடுத் தனர். அவர்கள்சுடப்பட்டதாக அன்றைய தினம் அரசாங்கம் அறிவித்தது.
புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப் பாளர் செல்வராசா பத்மநாதன் நிராயுத பாணியாக வெள்ளைக்கொடியேந்தி வந்த தமது உறுப்பினர்களை இலங்கை அரசாங் கம் திட்டமிட்டுப் படுகொலை செய்ததாக குற்றம்சுமத்தினார்.
மேற்படி இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டதாக பாலித ஹொகன தெரி வித்தார். பிரேத பரிசோதனைகள் நடத்தப் பட்டதா என்பது குறித்து அவரால் கூற முடியவில்லை. பிரபாகரனின் உடலும் தக னம் செய்யப்பட்டதாக இராணுவம் அறிவித் துள்ளது.
இந்த தகனங்கள் சாட்சியங்களை அழிக் கும் என்பதால் இது குறித்த செய்தி மிகுந்த கவலையளிப்பதாக மனித உரிமைகள் கண் காணிப்பகத்தின் பேச்சாளர் அன்னா நீஸ் டன் தெரிவித்துள்ளார். ஆனால் புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோர் துணை இராணுவக் குழுக்களினால் பாதிப் புக்குட்படும் சாத்தியமே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதான கவலைக் குரிய விடயம் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை மேற்படி சரணடைதல் விவ காரத்தில் பிரிட்டன் மறைமுகமான விதத் தி லேயே தொடர்புபட்டதாக பிரிட்டிஷ் அதி காரியொருவர் தெரிவித்துள்ளார் என பிரிட் டனின் கார்டியன் பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சார்பில் நாம் பிரத்தியேகமாக இதில் பங்குபற்றவில்லை. பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பது உட்பட இப்பிரச்சி னையை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐ.நா. செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கவேண்டும் என நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம் என மேற்படி அதி காரி தெரிவித்துள்ளார் .
0 விமர்சனங்கள்:
Post a Comment