இலங்கையில் "ராவண்' படப்பிடிப்பு அனுமதிக்கு காத்திருக்கும் மணிரத்னம்
தமிழ், இந்தியில் மணிரத்னம் இயக்கும் "ராவண்' படப் பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளது.
இதற்காக அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டுக் காத்திருக்கிறார் மணிரத்னம். இதில் தமிழில் விக்ரம், ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்கள். இந்தியில் ஐஸ்வர்யாவுடன் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். இராமாயணம் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இராவணன் வேடத்தில் விக்ரம் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இலங்கையிலுள்ள லங்காபுரா தீவில் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். இதற்காக அந்நாட்டு அரசின் அனுமதிக்காக அவர் காத்திருக்கிறார்.
இதற்கிடையே நெஞ்சுவலி ஏற்பட்டு கடந்த மாதம் ஆஸ்பத்திரியில் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் குணமடைந்து வருகிறார். தேர்தலுக்குப் பின் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார். அதன்பின் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த அவருக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment