இரண்டாகப் பிளவுபடும் ஆபத்திலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்டு விட்டது
நாடு இரண்டாக பிளவுபடும் ஆபத்திலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேசத்தின் பொது எதிரிக்கு மீண்டும் தலைதூக்க இந்த நாட்டில் இடமில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சர்வதேச தாதியர் தின வைபவத்தில் பேசும்போதே ஜனாதிபதி ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நம்பிக்கையை உறுதிப்படுத்தவே நாம் திடசங்கற்பத்துடன் செயற்பட்டோம். இன்று நாடு இரண்டாக பிளவடையும் ஆபத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டது. தேசத்தின் பொது எதிரிக்கு இனிமேலும் மீண்டும் தலைதூக்க இந் நாட்டில் இடமில்லை.
பயங்கரவாதத்திற்கு மட்டுமின்றி மேலும் பலவற்றுக்கும் அடிமைப்பட்டே இந்த நாடு நிர்வகிக்கப்பட்டு வந்தது. சிற்?ழியர் ஒருவரைக் கூடஅரச சேவையில் இணைக்க வேண்டாமென அன்று சுற்றுநிருபம் விடுக்கப்பட்டிருந்தது. அப்படி செய்திருந்தால் உங்களது சகோதர, சகோதரிகள் 15 ஆயிரம் பேருக்கு இந்நாட்டில் தாதி சேவையில் இடம் கிடைத்திருக்காது. அரச சேவையும் பலப்பட்டிருக்காது.
நாம் அரச சேவை குறித்து இப்படி செயற்படும் நிலையில் அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்து நூறு நாட்கள் முடிவடையும் போது 20 இலட்சம் பேருக்கு வேலையில்லாமல் போனதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனினும் நாம் அரசதுறையை பலப்படுத்தினோம். இதுதான் உண்மை. எல்லோரும் தற்போது இதைப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாம் அந்த நிலைமைக்கு இந்த நாட்டை இட்டுச் செல்ல இடமளிக்கவில்லை.
எமது அரசாங்கம் பிரச்சினைகளை கண்டு விலகிப் போனதில்லை. நாம் மக்களின் பிரச்சினை குறித்து உணர்வுபூர்வமாக பார்த்திருக்கிறோம். பொதுவாகப் பார்த்தால் இன்று பணவீக்கம் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ள சந்தர்ப்பம் இது.
நாட்டின் வருமானம் 50 மில்லியனால் குறைவடைந்திருக்கும் போதும் நாம் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தவில்லை. உணவு நெருக்கடி நிலவிய நேரத்தில் எரிபொருள் விலை மிக அதிகமாக இருந்த போதிலும் நாம் எரிபொருட்களில் எந்த வரியும் அறவிடவில்லை. நட்டத்துக்கு முகம் கொடுத்து மக்க களுக்கு நிவாரணம் வழங்கினோம். இந்த நிலைமையுடன் நாம் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் சென்றோம்.
வாக்குகளை எதிர்பார்த்து ஆட்சி நடத்த முடியாது. நாட்டைப் பற்றி சிந்தித்தே ஆட்சி நடத்த வேண்டும். இன்று நாட்டில் பாரிய அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. நாம் நாட்டை விடுவிக்கும் அதேநேரம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டுள்ளோம் என்றார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment