"இலங்கையின் மனிதாபிமான நெருக்கடியும் ஒபாமா நிர்வாகமும்'
இலங்கையின் மனிதாபிமான நெருக்கடியை அதிகளவிலோ அல்லது குறைந்த மட்டத்திலோ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகம் சிறப்பாக கையாண்டுள்ளதாக "த நியூ ரீ பப்ளிக்' பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
பார்க் கோல்ட்பேர்க் என்பவர் இது தொடர்பாக த நியூ ரீ பப்ளிக் இல் எழுதியிருக்கிறார்.
குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடனை அமெரிக்கா தாமதப்படுத்திவைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஒபாமாவின் நிர்வாகமானது குறிப்பிட்ட நோக்கத்தை வென்றெடுக்க பணத்தை பந்தயம் கட்டியிருப்பதாக கோல்ட்பேர்க் எழுதியிருக்கிறார்.
யாவும் சரியானது என்றும் சிறந்த ஆரம்பம் என்றும் கோல்ட்பேர்க் கூறினாலும் இது இப்போதே ஆரம்பமாகியுள்ளது. ஆனால் இப்போதும் எதிர்கொள்ளவேண்டிய பலவிடயங்கள் உள்ளன.
முதலாவதாக இலங்கை நெருக்கடியானது ஒபாமாவின் நிர்வாகத்தின் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதல்ல. தசாப்தங்களாக நீடித்துவரும் பிரச்சினையாகும்.
2008 இன்முற்பகுதியில் அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை முறித்துக்கொண்டு யுத்தத்தை இறுதிக்கட்டத்திற்கு கொண்டுவந்துள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாக சூளுரைத்திருக்கிறது.
ஆனால் அமெரிக்காவோ அல்லது வேறு எவரோ இந்த தற்போதைய நெருக்கடி வந்துகொண்டிருப்தை நீண்டகாலமாக பார்த்துவந்துள்ளனர். இது ஆச்சரியமானதல்ல.
அரசாங்கங்களிடமிருந்து கடுமையான அறிக்கைகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையிலும், ஐ.நா. சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டது.
பாதுகாப்பு சபையின் ஒப்பீட்டளவிலான மௌனமானது கடந்து செல்லும் ஒவ்வொருநாளிலும் வெட்கத்தை அதிகரித்து செல்வதாக உள்ளதாக சர்வதேச நெருக்கடிக்குழுவின் தலைவர் கரத் இவான்ஸ் எழுதியுள்ளார். உறுப்பு நாடுகள் மத்தியில் இலங்கை அரசாங்கம் ஆதரவை கோரி பேச்சுவார்த்தை மேற்கொள்வதே இதற்கு காரணம் என்று கூறிகிறார்.
பாதுகாப்பு சபையில் செயற்பாட்டுத் திறன் எந்தளவு தூரம் கனதியாக இருக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது.
சர்வதேச நாணயநிதியத்தின் கடன் தாமதமானால் இலங்கை வேறு எங்கும் பணத்தை பெற்றுக்கொள்ளமுடியாது என்ற எண்ணத்தில் இருக்கமுடியாது. பாரம்பரியமாக கடன் பெற்றுக்கொள்வோரை விடுத்து ஏனைய வளங்கள் குறித்து அண்மையில் நாட்டின் கவனம் திரும்பியுள்ளது. சீனா, பாகிஸ்தான் குறித்து சிந்திக்கிறது. அப்படியானால் ஒபாமா என்ன செய்வார்? ஆனால் இலங்கை தொடர்பான புதிரானது அதிகளவுக்கு என்ன செய்வது என்று நிச்சயிக்க முடியாத நிலைமையையே ஏற்படுத்தும் என்று கோல்ட் பேர்க் எழுதியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment