இலங்கை வந்த கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் விமான நிலையத்தில் தடுத்துவைப்பு
இலங்கைக்கு விஜயம் செய்த கனேடியப் பராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கட்டுநாயக்க விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு நாடு கடத்தப்படவுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இவர் செயற்பட்டுவருகிறார் என ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த. இந்த நிலையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் விமான நிலையத்திலேயே தடுத்துவைக்கப்பட்டார்.
அவரை இன்று புதன்கிழமை கனடாவுக்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்திருப்பதாக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment