ஈரப்பெரியகுள ராணுவ ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியது ….பெரும் கரும் புகை மண்டலமாக காட்சி அளிக்கும் வவுனியா
வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் வெடித்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்து இன்று மாலை 5.15 மணியளவில் ஏற்பட்டதாகவும் தொடர்ச்சியாக அரை மணித்தியாலத்திற்கு வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் நகரமே அதிர்ந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
இராணுவத்தின் 211 ஆவது படை தலைமையகத்தின் ஆயுத களஞ்சிய சாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தலைமையகம் இராணுவ முகாமிற்கும் விமான படை முகாமிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக வெடிச்சத்தங்கள் கேட்டமையினால் நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் மத்தியில் பெரும் பீதியும் அச்சமும் ஏற்பட்டது. நகரத்திற்கு வருகைதந்திருந்தவர்கள் அவசர அவசரமாக தங்களது வீடுகளை நோக்கி விரைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
0 விமர்சனங்கள்:
Post a Comment