புலிகளின் கொழும்பு சொத்துகள் மீது விசாரணை; பல்லேகல புனர்வாழ்வு முகாமில் மேல்மட்ட புலிகள் மீது கீழ்மட்ட உறுப்பினர்கள் தாக்குதல்
பல்வேறு பினாமி வர்த்தகர்களினதும் நிறுவனங்களினதும் பெயர்களில் புலிகள் கொழும்பு நகரில் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்களை வாங்கியுள்ளதாக கிடைத்துள்ள தகவல்களின்படி விசேட புலனாய்வுப் பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புலிகளின் கனடா நிறுவனம் சார்பில் கொழும்பில் பாரிய தொடர்மாடிக் கட்டிடங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
கண்டி, பல்லேகல புனர்வாழ்வு முகாமில் உள்ள புலிகளின் கேணல் தரத்திலான நான்கு பேரை கீழ்மட்ட புலிகள் உறுப்பினர்கள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தாக்கி வருகின்றனர் என்று சிரேஷ்ட புலி உறுப்பினர்கள் முகாம் பொறுப்பதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தனியான அறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment