"ஒருபுறம் சமாதானம் பற்றி பேச்சு மறுபுறம் ஆயுதக்கொள்வனவில் கண்'
ஆசியாவின் பாதுகாப்புத்துறை கொள்கை வகுப்பாளர்கள் நேற்று சிங்கப்பூரில் இடம் பெற்ற பாதுகாப்புத் தொடர்பான மாநாட்டில் "சமாதானம்' தொடர்பாக பேசியபோதும் அதேவேளை, ஆடம்பர ஹோட்டலின் தாழ்வாரங்களில் ஆயுத விநியோகஸ்தர்களுடன் கொள்வனவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக ராய்ட்டர் செய்திச்சேவை குறிப்பிட்டிருக்கிறது.
சிங்கப்பூரில் ஆசியாவின் வருடாந்த பாதுகாப்பு தொடர்பான மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பிரதான ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் இராணுவத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் தமது அயலவர்களின் நகர்வுகள் மற்றும் நீண்டகால கிளர்ச்சிகள், கடற்பகுதி சர்ச்சைகள், அதிகரித்துவரும் செல்வம் என்பன தொடர்பாக பிராந்தியத்தில் தமது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வதற்கு கண்வைத்திருப்பதாக ராய்ட்டர் நிருபர் தெரிவித்திருக்கிறார்.
"தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இங்கு (மாநாட்டில்) பிரசன்னமாகி இருப்பது மிக முக்கியமானது' என்று பாதுகாப்புத்துறை விநியோகஸ்தர்கள் கருதுவதாக அமெரிக்க கடற்படை யுத்தக்கல்லூரியின் ஆசிய, பசுபிக் கற்கைகளுக்கான பேராசிரியர் ஜொனாதன் வாலக் கூறியுள்ளார்.
வடகொரியாவின் சமீபத்திய அணு பரிசோதனை குறித்து தனது நாடு கவனம் செலுத்தியிருப்பதாகவும் முதலில் தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும் ஆனால், எவ்22 யுத்த விமானங்கள் உட்பட தனது வான் படையை பலப்படுத்தப் போவதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
பென்ரகனின் இரண்டாவது பாதுகாப்புத்துறை விநியோகஸ்தராக விளங்கும் போயிங் போன்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். வாடிக்கையாளரை நாடி அவர்கள் சென்றுள்ளதாகவும் வெளிநாட்டுக்கான விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அவர்கள் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, எந்தவொரு பாதுகாப்புத்துறை விநியோகஸ்தர்களுடனும் இது கடைசி சந்திப்பாக இருக்கும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம கூறியுள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவுற்றிருப்பதையடுத்து அவர் இக்கருத்தை தெரிவித்திருக்கிறார்.
வர்த்தகம் மற்றும் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக ஆசிய பிராந்தியத்தில் கடல் மற்றும் விமானப் படைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதை தான் பார்க்க முடிவதாக போயிங் நிறுவன தலைவர் ஜிம் அல்வா கூறியுள்ளார்.
ஹோட்டலில் இருந்த தனியார் மாநாட்டு அறையில் இந்தியாவின் இராணுவ உயரதிகாரி விஜேசிங்கை போயிங் சந்தித்திருக்கிறார். பின்னர் விஜேசிங் பிரிட்டனின் "பிராங் சிஸ்ரம்ஸ்' நிறுவன அதிகாரியை சந்தித்திருக்கிறார்.
தனது இராணுவ செலவின ஒதுக்கீட்டை சீனா இந்த வருடம் 15 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது.
உலகின் அதிக சனத்தொகையை கொண்ட நான்காவது நாடான இந்தோனேசியாவும் தனது ஆயுதங்களை நவீனமயப்படுத்த விரும்புகிறது. விமானங்கள் கொள்வனவு தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேற்ஸுடன் அது சந்திப்பை நடத்தியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment