கை குலுக்க மறுத்த ஒபாமா
ஜி 8 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தன்னிடம் கை குலுக்குவதற்காக கையை நீட்டிய இத்தாலி பிரதமர் பெர்லஸ்கோனிக்கு கை குலுக்க மறுத்து விருட்டென சென்றதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஜி 8 மாநாட்டின் தொடக்கத்திலேயே இவ்வாறு நடந்துள்ளதால் பரபரப்பு உருவாகியுள்ளது.
ஜி 8 மாநாடு இத்தாலியின் லா அக்யூலா நகரில் தொடங்கியுள்ளது. இதில் கலந்து கொள்ள வந்த எட்டு நாடுகளின் தலைவர்களும் குரூப் போட்டோவுக்காக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது அதிபர் ஒபாமாவை வரவேற்ற பெர்லஸ்கோனி, அவரிடம் கை குலுக்குவதற்காக கையை நீட்டினார். ஆனால் தனது கையைக் கொடுக்காத ஒபாமா விருட்டென நகர்ந்து சென்றார்.
இதை எதிர்பார்க்காத பெர்லஸ்கோனி அதை சிரித்தபடி சமாளித்துக் கொண்டு, ஒபாமாவுடன் மாடிப் படியில் ஏறிச் சென்றார்.
இந்தக் காட்சி அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் சில அடி தூரம் சென்ற பிறகுதான், தான் பெர்லஸ்கோனிக்கு கை குலுக்காமல் வந்ததை உணர்ந்தார் ஒபாமா. இதையடுத்து அவரைப் பார்த்து சிரித்தபடி தொடர்ந்து நடந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment