ஒபாமா விரும்பும் உலகத் தலைவர்கள்
மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா ஆகியோரே தனக்கு முன் உதாரணமானவர்களென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதற்தடவையாக ரஷ்யத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய போட்டியொன்றிலேயே ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில் ஒபாமா மேலும் தெரிவிக்கையில்;
சர்வதேச அளவில் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரே எனது முன்மாதிரிகள்.
வன்முறை வழியைக் கையாளாமல் மக்களது மனங்களையும் இதயத்தையும் மாற்றிய தலைவர்களையே விரும்புகிறேன். தேசிய அளவில் ஆபிரகாம் லிங்கனை மிகவும் நேசிக்கிறேன்.
அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்டார் என்பது மட்டுமல்ல, மனிதர்களை முழுமையாகப் புரிந்துகொண்டு அதன்படி செயலாற்றினார்.
உள்நாட்டுப் போர் நடந்துவந்த நேரத்திலேயே அதை எதிர்கொண்டதுடன் மட்டுமல்லாமல், அடிமைகள் முதல் அடிமைப்படுத்தியவர்கள் வரை அனைவரது உள்ளங்களையும் புரிந்துகொண்டு எல்லா மக்களையும் இணைக்க பெருமுயற்சி மேற்கொண்டதாலேயே தனித்துவம் மிக்க தலைவராக லிங்கன் பிரகாசிக்கிறார் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, தான் காந்தியால் கவரப்பட்டேன் என கடந்த ஆண்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒபாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment