விடுதலைப்புலிகளின் தலைவராக நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்?
புலிகள் ஒருபோதும் ஆயுதங்களை கைவிடார்கள் என்பதை நாம் அறிந்திருந்தோம். ஆரம்பத்திலிருந்தே இராணுவ நடவடிக்கைகளுக்கு நான் தயாராக இருந்தேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். ராமுக்கு ஜனாதிபதி அளித்த பேட்டியின் இரண்டாவது தொகுதி நேற்று செவ்வாய்க்கிழமை அப்பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அப்பேட்டி இங்கு தரப்படுகிறது.
என். ராம்: 2005 இல் நீங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட போது இந்த மோதல் தொடர்பாக உங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது? 2005 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனமான மகிந்த சிந்தனையில் இது தொடர்பாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ""எமது நாட்டின் விடுதலை உன்னதமானது. நான் எந்தவொரு பிரிவினைவாதத்திற்கும் அனுமதியளிக்க மாட்டேன். எமது நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதற்கு எவருக்கும் நான் அனுமதியளிக்க மாட்டேன். நான் சகல இன, மத அடையாளத்துவங்களையும் மதிப்பேன். எவருக்கு எதிராகவும் படைப் பலத்தை பிரயோகிப்பதை தவிர்த்துக்கொள்வேன். தனிப்பட்டவர்கள் மற்றும் சமூக சுதந்திரம் என்பவற்றை பாதுகாக்கும் புதிய சமூகத்தை கட்டியெழுப்புவேன்' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த கொள்கைப் பிரகடன அறிக்கையில் பிரிக்க முடியாத நாடு, தேசிய கருத்தொருமைப்பாடு, கௌரவமான சமாதானம் என்பன பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வாறானால், உங்களின் உண்மையான எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது, நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்றபோது உங்கள் எதிர்பார்ப்பு என்ன? மோதலுக்கு செல்வதற்கு முன்னர் உங்களிடம் எந்தவொரு திட்டமும் இருந்ததாகத் தென்படவில்லை.
ஜனாதிபதி: பயங்கரவாதம் குறித்து நான் மிகவும் தெளிவாக இருந்தேன். தமிழர்களின் உணர்வுகளை நசுக்க நான் விரும்பியிருக்கவில்லை. ஆனால், ஆரம்பத்திலிருந்தே பயங்கரவாதம் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தேன். அதனாலேயே நான் வெற்றியடைவேன் என்று துரிதமாக எனக்கு தெரிந்திருந்தது. நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்குமாறு கோத்தாவை (அவரது சகோதரர் கோதாபய ராஜபக்ஷ) வரவழைத்தேன். நீங்கள் போக முடியாது. இங்கு காத்திருக்க வேண்டும் என்று அவருக்கு கூறினேன். அதுவே ஆயுதப் படைகளின் தளபதிகளை நான் தெரிவுசெய்த முறைமையாகும். செய்வதற்கு தயாராக அவர்களை நான் தேர்ந்தெடுத்தேன். பின்னர் புலிகளுக்கு நான் செய்தியை அனுப்பினேன். ""வாருங்கள் நாங்கள் பேச்சுவார்த்தையை நடத்தலாம், ஆராயலாம்' என்று செய்தியனுப்பினேன். நான் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தேன். மிகவும் நடைமுறைச் சாத்தியமானவராக நான் இருந்தேன். ""நீங்கள் விரும்பிய எதனையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், தேர்தல்களில் நீங்கள் ஏன் போட்டியிட முடியாது. இப்போது உங்கள் கைகளில் ஆயுதங்களை வைத்திருப்போராக நீங்கள் இருக்கிறீர்கள். மக்களை தெரிவுசெய்யுமாறு கேளுங்கள். மாகாண சபைக்கு தேர்தல்களை நடத்தலாம். அதன் பின்னர் நாம் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் மூலம் நான் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். ஆனால், ஆயுதங்களை வைத்திருப்போருடன் என்னால் பேசமுடியாது' அவர் (பிரபாகரன்) இழைத்த பாரிய தவறு இதுவாகும். நான் யதார்த்தவாதியாக நடைமுறைச்சாத்தியமான மனிதராக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
லலித் வீரதுங்க: ஜனாதிபதி 2005 நவம்பர் 19 இல் நியமிக்கப்பட்டார். அவருடைய ஆரம்ப உரையில் இந்த மனிதருக்கு (பிரபாகரனை) அழைப்பு விடுத்தார். நவம்பர் 27 இல் பிரபாகரனின் மாவீரர் தின உரையில் ஜனாதிபதி யதார்த்தவாதி என்று குறிப்பிட்டிருந்தார். (புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது அமைப்புக்கு அறிவிக்கையில் புதிய ஜனாதிபதியின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான அணுகுமுறையை பொறுத்திருந்து அவதானிப்போம். சில காலத்திற்கு அதனை அவதானிப்போம். ஏனெனில், ஜனாதிபதி ராஜபக்ஷ யதார்த்தவாதி என்றும் நடைமுறைச் சாத்தியமான அரசியலில் ஈடுபட்டுள்ளவர் என்றும் கருதப்படுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்). அவர் இதனை கூறியிருந்தார். ஜனாதிபதி தமது உரையில் நான் அந்த கடைசி எல்லை வரை செல்ல விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். பின்னர் டிசம்பர் 5 இல் அவர்கள் 13 அப்பாவி படையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். தமது சகாக்களுக்கு உணவு எடுத்துச் சென்ற ஆயுதங்களற்ற படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவ்வாறே இது (அந்த மோதல்) ஆரம்பமானது.
ஜனாதிபதி: அச்சமயத்திலும் கூட நான் எதனையும் செய்யவில்லை. ஆனால், பின்னர் என்ன நடைபெறுகிறது என்பதை அறிந்துகொண்டேன். அதன் பின்னர் எனது பாதுகாப்பிற்காக ஆரம்பித்தேன். பிறகு எமது இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியிருப்பதாக கோதாபய கூறினார். சகலதும் அவர்களால் திட்டமிடப்பட்டது. ""நீங்கள் எதனை விரும்புவீர்கள். ஆரம்பிக்கத் தயாரா? என்று நான் கூறினேன். ஆயினும், அவர்களின் (புலிகள்) பின்னால் நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால், தெற்கில் ஆட்கள் வேலையை தொடங்கிவிட்டார்கள் என்று எனக்கு தெரியவந்தது. பின்னர் நான் புலிகளை எச்சரித்தேன். ""இதனைச் செய்யவேண்டாம், என்னை கடுமையான நிலைப்பாட்டிற்கு தள்ள வேண்டாம் என்று எச்சரித்தேன்.
லலித் வீரதுங்க: பின்னர் நீங்கள் அவர்களுடைய தலைவர்களில் ஒருவருடன் பேசுமாறு என்னை அனுப்பியிருந்தீர்கள்.
ஜனாதிபதி: நான் அவரை அனுப்பினேன். நான் ஜெயராஜை அனுப்பினேன். (கொழும்பு செட்டி சமூகத்தைச் சேர்ந்த தமிழ் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவரும் அரசியல்வாதியுமான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, அவர் 2008 ஏப்ரல் 6 இல் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்).
லலித் வீரதுங்க: 2006 இல் சோதனைகள் இன்றி பல சோதனைச்சாவடிகளின் ஊடாக சென்றேன். ஜனாதிபதி கூறினார். ""இப்போது செல்லுங்கள் உங்களை அடையாளம் காட்ட வேண்டாம்' பின்னர் அவர் அவர்களுக்கு ""நான் ஒருவரை அனுப்புகிறேன். அவர் யார் என உங்களது ஆட்களால் கண்டுபிடிக்க முடியாது' என்று அவர்களுக்கு அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி: பாதுகாப்புத் துறையினருக்கு நான் கூறினேன் ""அங்கு ஒருவரை என்னால் அனுப்ப முடியுமாக இருந்தால் உங்களின் பாதுகாப்பு என்னமாதிரி' பல மாதங்களுக்கு பின் நான் அவர்களுக்கு கூறினேன் அவர் (லலித் வீரதுங்க) அவர்தான் அங்கு சென்றவர். உங்களுக்கு அதனைத் தெரியுமா என்று கூறினேன்.
லலித் வீரதுங்க: அதற்கு அப்பால் அவர் சென்றிருந்தார்.
என். ராம்: பலவீனத்தை பார்க்கவா?
லலித் வீரதுங்க: இல்லை. பேச்சுவார்த்தைக்கு
ஜனாதிபதி: பேச்சுவார்த்தை நடத்தவும் பலவீனத்தை பார்ப்பதற்குமாகும். பின்னர் நான் ஜெயராஜை அனுப்பினேன். சிங்களத்திலுள்ள சில உண்மைகளை அவர் கூறியிருந்தார். அதனை அவர்கள் விளங்கிக்கொண்டனர். நீங்கள் கொல்லப்படுவீர்கள் (தொடர்ந்து இந்தப் பாதையில் அவர்கள் சென்றால்)
என். ராம்: பின்னர் மாவிலாறு சம்பவம் ஆரம்பமானது.
ஜனாதிபதி: அதுவே அவர்கள் எனக்கு பச்சை விளக்கு காட்டிய நேரம்.
என். ராம்: ஆனால், ஆகஸ்ட் 2006 இலேயே நீங்கள் நன்கு ஆயத்தமாக இருந்துள்ளீர்கள்?
ஜனாதிபதி: ஆம். அதற்கு முன்பே, அவர்கள் இராணுவத் தளபதியை கொல்வதற்கு முயன்றார்கள்.
லலித் வீரதுங்க: ஏப்ரல் 2006 இல் இராணுவத் தளபதியை அவர்கள் கொல்வதற்கு முயன்றனர். பின்னர் ஒரு சுற்று குண்டுவீச்சு நடத்த ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஜனாதிபதி: ஆம். நான் கூறினேன். நாம் ஒருதடவை செல்வோம். நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். பேச்சுவார்த்தை ஊடாக எம்மால் முடிந்தளவுக்கு வழியைக் கண்டுபிடிக்க முயன்றோம்.
லலித் வீரதுங்க: ஜெனீவாவிலும் வேறு இடங்களிலும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவர்கள் (புலிகள்) பேச்சு நடத்தக்கூட விரும்பியிருக்கவில்லை.
ஜனாதிபதி: பேச்சுவார்த்தை இன்றியோ அல்லது எந்தவொரு காரணமுமின்றியோ இந்த இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், ஆரம்பத்திலிருந்தே அதற்கு (இராணுவ நடவடிக்கைகளுக்கு) நான் தயாராக இருந்தேன். எனக்கு தெரிந்திருந்தது ஏனென்றால், எனக்கு அனுபவம் இருந்தது. அவர்கள் ஒருபோதுமே ஆயுதங்களை கைவிடமாட்டார்கள் என்பதை நாம் அறிந்திருந்தோம். நாங்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருந்தோம்.
லலித் வீரதுங்க: இது தொடர்பாக சொல்ஹெய்முடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆர்வம் காட்டியது குறித்து நான் உங்களுக்கு கூறுகிறேன். மார்ச் 2006 இல் நான் அங்கிருந்தேன். சொல்ஹெய்ம் ஜனாதிபதியை சந்திக்க வந்தார். ""பிரபாகரன் இராணுவ ரீதியில் திறமையானவர் நடவடிக்கையின் போது நான் அவரை பார்த்துள்ளேன்' என்று அந்த இந்த விடயங்களைக் கூறினார். ஜனாதிபதி தெரிவித்தார் ""அவர் வடக்கின் காடுகளுக்குள் இருக்கின்றார். நான் தெற்கின் காட்டுக்குள் இருந்து வந்துள்ளேன். யார் வெற்றியடைவார்கள் என்று நாம் பார்ப்போம்' பின்னர் நியூயோர்க்கில் ஜனாதிபதி அமைச்சர் சொல்ஹெய்மை சந்தித்தார். இராணுவ ரீதியில் திறமையானவர் என்பது தொடர்பான உரையாடலை சொல்ஹெய்முக்கு ஞாபகப்படுத்தினார். 2007 இல் கிழக்கு வெற்றிகொள்ளப்பட்டிருந்தது. இப்போது பாருங்கள் வடக்கில் என்ன நடக்கப்போகின்றது என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.
என். ராம்: புலிகள் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்ட பின்னர் அவர்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அது உங்களை கடுமையாக பாதித்ததா?
ஜனாதிபதி: படையினருக்கு உரிய அறிவுறுத்தல்களையும் அவர்களுக்கு அவர்கள் விரும்பியவற்றையும் கொடுத்தால் எமது ஆட்கள் அவர்களை தோற்கடிப்பார்கள் என்ற உணர்வு ஆரம்பத்திலிருந்தே எனக்கு இருந்தது. அவர்கள் (புலிகள்) வெளிக்காட்டுவது யதார்த்தபூர்வமானதல்ல என்ற உணர்வை நான் எப்போதும் கொண்டிருந்தேன். ஆனால், நாங்கள் மேற்கொண்ட முறைமையில் தவறு இருந்தது. அவர்களிடம் ஆட்கள் இருந்தார்கள், ஆயுதங்கள் இருந்தன. இலங்கையை மட்டுமல்ல தென்னிந்தியாவையும் அவர்கள் தாக்கியிருக்கக்கூடும். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் இலங்கை மீதான தாக்குதலுக்கு மட்டுமல்லாமல் அதிகளவில் இருந்தன. எமது ஆயுதப்படைகள் கண்டுபிடித்த ஆயுதங்களின் தொகை நம்பமுடியாத அளவு இருந்தது. எமது புலனாய்வுப் பிரிவினர் அவர்களிடம் 15 ஆயிரம் போராளிகள் இருப்பதாக கூறியிருந்தனர். ஆனால், அதுதான் எண்ணிக்கை அல்ல என்று எனக்கு தெரிந்திருந்தது. நான் ஒரு வட்டாரத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. புலிகளிடம் இவற்றிலும் பார்க்க அதிக தொகை இருப்பது எனக்கு தெரிந்திருந்தது. புலிகளை குறைத்து மதிப்பிட்ட வேலையை நான் ஒருபோதும் செய்திருக்கவில்லை.
என்.ராம்: அப்படியானால் அவர்கள் உலகில் மிகவும் இரக்கமற்ற, சக்திவாய்ந்த பயங்கரவாத அமைப்பென்று நீங்கள் கூறுகிறீர்கள்.
ஜனாதிபதி: ஆம். உலகிலேயே மிகவும் கொடூரமான வளம் நிறைந்த பயங்கரவாத அமைப்பாகும். நன்கு ஆயுத தளவாடங்களும், சிறந்த பயிற்சியும் பெற்றிருந்தனர்.
என்.ராம்: அவர்களின் இறுதித் தந்திரோபாயம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கரையோர பகுதியில் சிறிய நிலப்பரப்பில் புலிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் இருந்தனர். இது உலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவர்கள் எதனை எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் துணிச்சலான பதில் தாக்குதல் மேற்கொள்ள விரும்பியிருந்ததாக எமக்கு எழுதும் பி.பி.எஸ். ஜெயராஜ் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி: அவர்கள் தப்பிச்செல்லவே விரும்பியிருந்ததாக நான் நினைக்கிறேன். இறுதிக் கட்டத்தில் தம்மை யாரோ வந்து கொண்டுசெல்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இல்லாவிடில், அவர்கள் அங்கே சென்றிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கடற்புலித் தளம் இருந்தது. கப்பலை, ஏன் நீர்மூழ்கியைக் கூட மிகவும் நெருக்கமாக கொண்டுவருவதற்கான ஒரேயொரு இடமாக அது இருந்தது. அவர்கள் தமக்கென சிறப்பான இடத்தை தேர்ந்தெடுத்திருந்தனர். ஒருபுறம் கடல், மறுபுறம் வாவி இதற்கிடையில் சிறிய நிலப்பரப்பு இருந்தது. ஆனால், பின்னர் உண்மையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட இடமாக அது அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் தெரிவுசெய்திருந்தனர். ஆனால், ஆயுதப்படைகள் அவர்களை அங்கு செல்ல வைத்தனர். மோதல் சூனியப் பகுதிகள் ஆயுதப்படைகளால் அறிவிக்கப்பட்டிருந்தன. கிளிநொச்சிக்குப் பின்னர் மோதல் சூனியப் பகுதிகளுக்கு செல்லுங்கள் என்று கூறியிருந்தனர். ஆதலால், சகலரும் அங்கு சென்றனர். இந்தப் பகுதி ஐ.நா. வால் வரையறை செய்யப்பட்ட பகுதிகள் அல்ல. அவை எமது படையினரால் வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். அவர்களை ஓரங்கட்ட முழுத் திட்டமும் எமது படையினரால் தீட்டப்பட்டது. இராணுவம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கிலிருந்து வடக்கிற்கும் சகல பக்கமாகவும் முன்னேறியது. ஆதலால், எமது உபாயம் வகுப்போரால் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் என்று என்னால் கூறமுடியும்.
ஜனாதிபதி: சரணடைந்த பெண் ஒருவர் அவர்கள் 6 அல்லது 7 பெண்கள் (புலிகளின் பெண் போராளிகள்) தீர்மானித்திருந்தார்கள் அந்தப் பெண் தனது அறிக்கையில் கூறியிருந்தார்; இறுதியில் 2 அல்லது 3 பேர் சயனைட்டை அருந்தி தங்களை தாங்களே கொன்றனர்; பின்னர் 3, 4 பெண்கள் கூறினார்கள் ""சரி. நாங்கள் கற்பழிக்கப்படுவோமா அல்லது எம்மை நாமே கொல்வோமா அல்லது கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவோமா என்பதை நாம் பார்ப்போம், இந்த ஆபத்தான வேலையை நாம் எடுத்துக்கொள்வோம்' பாடசாலை ஆசிரியர் ஒருவர் சரணடைந்திருந்தார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை. அவரால் இதனை நம்ப முடியவில்லை. எம்முடன் போராடுவதற்காக அரசாங்கத்தால் அவருக்கு ஊதியம் வழங்கப்பட்டிருந்தது. அதேசமயம், நாங்கள் இப்போது சகல அரசாங்க ஊழியர்களுக்கும் (வடக்கின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த) எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்தகாலத்தை மறந்துவிடுங்கள். இந்த அமைப்புகளுடன் நீங்கள் பணிபுரிந்துள்ளீர்கள். இப்போது அங்கு காத்திருக்க முடியாது. நாங்கள் உங்களுக்கு ஊதியத்தை வழங்கிக்கொண்டிருக்கிறோம் என்று நான் அவர்களுக்கு கூறப்போகிறேன். இப்போது ஆசிரியர்கள் அவசியம் செல்ல வேண்டும். ஏனையவர்கள் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்த பொதுமக்கள் முதல் நாள் வங்கியில் வைப்புச் செய்த பணம் 450 மில்லியன் ஆகும். மக்கள் வங்கி, இலங்கை வங்கி ஆகியவற்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. கணிசமான அளவு தங்கமும் வைப்புச் செய்யப்பட்டிருக்கிறது. இராணுவம் மிகவும் ஒழுக்கமுடையதாக உள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment