கூட்டமைப்புத் தலைவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்
கடந்த வியாழக்கிழமை ஜனா திபதி செயலகத்தில் நடை பெற்ற சர்வ கட்சிக் கூட்டம் நம்பிக்கையூட்டும் ஆரம்பம் என்பதை முன்னரும் கூறியிருக்கின்றோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடய ங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் அனைத்தும் கூடிப் பேசுவது கடந்த கால நிகழ்வுகளின் பின்னணியில் பார்க் கும் போது சாதாரண விடயமல்ல. கட ந்த காலங்களில் எதிர்க் கட்சிகள் அர சாங்கத்துடன் பேசுவதைத் தவிர்த்து வந் தன. ஏதாவதொரு சாட்டுச் சொல்லிப் பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுங்கியிருப் பதே வழக்கமாக இருந்தது. பயங்கரவா தத்துக்கு எதிரான இராணுவ நடவடிக் கையில் படையினர் ஈட்டிய வெற்றி அரசியல் அரங்கில் நம்பிக்கையூட்டும் புதிய சூழ்நிலையைத் தோற்றுவித்திருக் கின்றது எனக் கூறலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதி நிதிகளும் மேற்படி சர்வ கட்சிக் கூட்ட த்தில் பங்குபற்றியிருக்கின்றார்கள். இவர் கள் அக் கூட்டத்தில் பங்குபற்றியிருப் பது பெரும்பாலான தமிழ் மக்களிடம் நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கின் றது. கடந்த மூன்று வருட காலமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்க த்துடன் பேசுவதில்லை என்ற கொள்கை யையே பின்பற்றி வந்தது. புலிகளின் தோல்விக்குப் பின் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு மாறிவிட்டது. அதனா லேயே சர்வ கட்சிக் கூட்டத்தில் பங்கு பற்றினார்கள். இதேபோல, யதார்த்த விரோதமான ஏனைய நிலைப்பாடுக ளையும் கூட்டமைப்பு கைவிட வேண் டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார் ப்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி நாட்டையே இனப் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுச் செயற்பட்டு வந்திருக்கி ன்றது. கூட்டமைப்பின் சில தலைவர் கள் தனிநாடு தங்கள் கொள்கையல்ல என்று இடைக்கிடை கூறிவந்த போதி லும் ஒட்டுமொத்தமாக அது தனி நாட்டை நோக்கியே செயற்பட்டது. புலி களின் நிகழ்ச்சி நிரலைக் கூட்டமைப்புத் தலைவர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண் டும். கூட்டமைப்பு தனிநாட்டுக் கொள் கையைத் தொடர்ந்து பின்பற்றுகின்றதா அல்லது கைவிட்டுவிட்டதா என்பதை மக்களின் ஊகத்துக்கு விடாமல் உத்தி யோகபூர்வமான அறிவித்தலொன்றை வெளியிடுவதே சிறந்தது.
ஜனாதிபதியுடன் தனியாகப் பேசுவதற் கான திகதியொன்றை ஒதுக்கித் தருமாறு கூட்டமைப்புத் தலைவர்கள் கேட்டிருப் பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை யில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக இடம்பெற்றாக வேண் டும். அரசியல் தீர்வைப் பொறுத்த வரை யில் தனிநாட்டுக் கோரிக்கை காலாவதி யாகிவிட்டது. ஐக்கிய இலங்கையில் அர சியல் தீர்வு என்பதே யதார்த்தபூர்வமான நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்பவர்களாக நடத்தும் பேச்சு வார்த்தையே பலனளிப்பதாக இருக்கும். எனவே, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த் தைக்குச் செல்வதற்கு முன் இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு பற்றிய அதன் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண் டியது அவசியமாகின்றது.
கடந்த காலங்களில் நடைமுறைச் சாத் தியமற்ற தனிநாட்டுக் கொள்கையாலும் யதார்த்தத்துக்கு முரணான அணுகுமுறை களாலும் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களைப் படிப்பினையாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப் புத் தலைவர்கள் சரியான முடிவுக்கு வருவார்களென நம்புகின்றோம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment