ராதா படையணியின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பார் கண்ணன் கைது
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ராதா படைப்பிரிவின் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட ஒருவரை தமது குழுவொன்று வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் வைத்து கைதுசெய்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்ணன் என அழைக்கப்படும் தவரூபன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். ராதா படைப்பிரின் பொறுப்பாளர் ரத்னம் மாஸ்டரின் செயலாளராகவும் கண்ணன் பணியாற்றியுள்ளார்.
புலிகளின் தலைவரிடம் நெருங்கி தொடர்புகளை கொண்டிருந்த கண்ணன் முக்கிய தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து புலிகளின் ஆயுத களஞ்சியம் குறித்து தேடுதல்களை மேற்கொள்ளும் நோக்கில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட காவற்துறை குழுவொன்று விஸ்வமடு பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment