ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்குத் தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவைப்படின், அதனை இலங்கையிடமிருந்து எதிர்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தியின் கொலை வழங்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான் ஆகியோர் தொடர்பிலேயே, இலங்கையிடமிருந்து மேலதிக தகவல்களை எதிர்பார்ப்பதாக இந்திய லோக்சபாவில் நேற்று புதன்கிழமை அவர் கூறினார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கென 500 கோடி ரூபா நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், முகாம்களிலிருக்கும் ஐயாயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் இரண்டாயிரத்து 600 தகரக் கூடாரங்கள் அனுப்பிவைக்கப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், நிலக்கண்ணிவெடிக்களை அகற்றுவதற்கென 4 குழுக்கள் அனுப்பிவைக்கப்படவிருப்பதாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், அங்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித் தீர்வு காணப்படவேண்டுமெனவும் எஸ்.எம்.கிருஷ்ணா குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment