மைக்கல் ஜக்சனின் உயிரை பறித்தது மருந்துகளா?
மைக்கேல் ஜக்சனின் வீட்டில் ஆழ்நிலை உறக்கத்தை அளிக்கும் மருந்துகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள் ளனர்.
மாரடைப்பு காரமாக உயிரிழந்தார் பொப் இசை பாடகர் மைக்கேல் ஜக்சன். அவரது மரணத்துக்கான காரணத்தை அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இவர்க ளுடன் கலிபோனியாவின் அட்டர்னி ஜெனரல் அலுவலக அதிகாரிகளும் இணைந்து மரணத் துக்குக் காரணம் மைக்கேல் ஜக்சன் பயன்படுத்திய மருந்துப் பொருள்களா என்பதை ஆராய்ந்து வருகின் றனர்.
அமெரிக்காவில் தலைவலி, சளி, இருமல் உள்ளிட்ட சாதாரண தொந்தரவுக்குக் கூட மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் (பிரிஸ்கிரிப்ஷன்) இருந்தால் மட்டுமே மருந்து, மாத்திரைகளை வாங்க முடியும். ஒரு மாத்திரையாக இருந்தாலும் அதற்கு பில் போட்டுத்தான் கொடுப் பார்கள். பீ
இதனால் சாதாரண தொந்தரவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெரும்பாலான மருந்து விற்பனை நிலையங்களில் டாக்டரும் இருப்பது வழக்கம். அந்த அளவுக்கு மருந்து கட்டுப்பாடு சட்டம் (யுஸ்எஃப்டிஏ) கடுமையாக உள்ளது.
மைக்கேல் ஜக்சனின் ஹோல்ம்பி ஹில்ஸ் மான்ஷன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட மருந்துகள் ஆழ்நிலை உறக்கம் அளிக்கக் கூடியது.
இதைப் பொதுவாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை யின் போது மயக்கம் அளிப்பதற்காகப் பயன்படுத்துவர். புரொபோஃபோல் என்ற இந்த மருந்து டிப்ரிவான் என்ற பிராண்டு பெயரில் விற்பனை செய்யப்பட்டு ள்ளது.
இந்த வகை மருந்துகள் டாக்டரிடம் மட்டுமே இருக்கும். அது எப்படி ஜக்சனுக்கு கிடைத்தது என்கிற ரீதியில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டைம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டு ள்ளது.
ஜக்சனின் மரணத்துக்கு அவர் எடுத்துக் கொண்ட மாத்திரைகள் மற்றும் ஊசிகள் காரணமா என்கிற ரீதியில் நஞ்சுகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். இதனி டையே ஜக்சனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த டாக்டர்களின் பட்டியலை யு.எஸ்.எஃப்டிஏ அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். அவருக்கு யார் மூலம் இத்தகைய ஆழ்நிலை உறக்கம் அளிக்கக் கூடிய மருந்துகள் கிடைத்துள்ளன என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.
எந்த மருந்து காரணமாக மைக்கேல் ஜாக்சன் மரணம் சம்பவித்தது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவரது குழந்தைகள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த தாதி நானி ஆகியோர் மருந்துக்கள் தான் ஜக்சனின் மரண த்துக்குக் காரணம் என்று கூறியுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment