மைக்கல் ஜக்ஸனுக்கு கவிதைக் காணிக்கை
உடல் உறுப்புகள் யாவிலும் இசையை
இறுக்கி இணைத்து இயல்பெனக் கொண்டு
உலகம் வியக்கும் ‘பொப்’ இசை மன்னனாய்
உருக் கொடுத்தவன் மைக்கல் ஜக்ஸன்!
உலகப் புதுமையாய் இசையினைக் கொண்டே
இயக்கிய நடனமும் உலகினில் புதுமையே!
உடலையும் மனதையும் உலகினர்க் கீந்து
உணர்ச்சியை உருக்கமாய்க் கொடுத்தவன் ஜக்ஸன்!
இன்றுதான் உலகின் வெறுமை புரிந்தது!
இணைந்தவரெல்லாம் மெளனியா யாகினர்!
ஒன்றிணைந்து மைக்கல் ஜக்ஸனாய்
இரசிகர்கள் யாவரும் மெளனமாகினர்!
இசையிலும் நடன உயர்விலும் மரபினை
புதுமையாய் மாற்றிய மைக்கல் ஜக்ஸனை
அசைத்திட முடியாக் கலா சாரவேரினை
அமைதியுடனே ஆய்ந்திட முந்துவர்!
உலகியல் பல்கலைக் கழகங்கள் யாவும்
உணர்ந்து செயல்படும் உணர்வினை இன்று
கனதியாய் ஆய்வுகள் செய்திட முனையும்
அத்திவாரமாய் இக்கவிதையே காணிக்கை!
கவிஞர் ஏ. இக்பால்
0 விமர்சனங்கள்:
Post a Comment