‘மீள்குடியேற்றம் தாமதமென்போருக்கு கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது’
இடம்பெயர்ந்தோர் தொடர்பான போலி பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி
இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த போலிப் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப் பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வவுனியாவில் தெரிவித்தார்.
மக்களை முகாம்களில் தடுத்து வைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்குக் கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக வவுனியா நகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் முரளிதரன் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்குச் செயல ணியின் தலைவ ருமான பசில் ராஜபக்ஷ எம். பி.யின் தலைமை யில் நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்து உரையாற் றிய அமைச்சர் முரளி தரன்,“மீள்குடியேற்றம் தாமத மாகுவதாக விமர்சனம் செய்பவர்களுக்குக் கண்ணிவெடி யின் தாக்கம் தெரியாது.
அவசரப் பட்டு மக்களைக் குடியமர்த்தி யிருந்தால், இதுவரை ஆயிரம், இரண்டாயி ரம் பேரை இழந்திருப்போம். எனவே அவற்றை அகற்றிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மக்களை மீளக்குடியேற்ற வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உயிர்களை இழப்பதைத் தவிர வேறு நன்மை கிடைக்காது என ஐந்து வருடங்களுக்கு முன்பே கூறினோம். ஆனால், அவர்கள் ஏற்கவில்லை.
இனித் தமிழ் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். அதற்கு ஜனாதிபதியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும். இன்னும் 2, 5 வருடங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்படும். நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும். கடந்த கால வடுக்களை மறந்துவிட்டு தன்னம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் நாம் வாழவேண்டும்” என்றார்.
நீதி, சட்ட மறுசீரமைப்பு பதில் அமைச்சர்வீ. புத்திரசிகாமணி உரையாற்றுகையில்,
“யுத்தம் நிறைவுக்கு வந்ததில் சிங்கள மக்களைவிட தமிழ் மக்கள்தான் நிம்மதியடைந்திருக்கின்றார்கள். பல நாட்கள் சூரிய ஒளியைக் காணாது பதுங்கு குழிக்குள்ளிருந்த மக்களை வெளியில் கொண்டு வந்தார் ஜனாதிபதி. யுத்தத்தால் தமிழ் மக்கள்தான் அதிக துயரங்களை அநுபவித்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஜனாதிபதி விடுதலையைத் தேடித்தந்தமை மகிழ்ச்சியே! தமிழ் மக்களைக் கண்டால் தமிழில் உரையாடும். ஒரே ஒரு அரச தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான்” என்றார்.
வவுனியா அரச அதிபர்
திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ்
“வடக்கு கிழக்கு மக்கள் நீண்டகாலமாக சொல்லொணா துயரங்களை அநுபவித்துள்ளார்கள். நான் கடந்த ஒக்டோபரில் அரச அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மீள்குடியேற்றப் பணிகளுக்குப் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டேன். நாம் 270,000 பேரை வைத்துப் பராமரித்து வருகின்றோம். அதில் இன்று ஒரு தொகையினர் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். எஞ்சிய ஏனையோரையும் கூடிய விரைவில் குடியேற்றுவோம்”.
தினகரன்






0 விமர்சனங்கள்:
Post a Comment