புனர்வாழ்வு ஏற்பாடும் வெற்றுப் பிரசாரமும்
அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட புலிகள் இயக்க த்தைச் சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான விசேட ஏற் பாட்டை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது.
தற்கொலையாளிகள் உட்படப் புலி கள் இயக்கத்துடன் சகல மட்டங்களிலும் தொடர்பு கொண்டிருந்தவர்கள் இப் புனர்வாழ்வு ஏற்பாட்டில் உள்ளடக்கப்ப டவுள்ளனர்.
பாரிய குற்றங்களுடன் தொட ர்புடையவர்களுக்கு எதிராக உரிய முறை யில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக் குப் புனர்வாழ்வு அளிக்கும் அரசாங்கத் தின் முடிவு உச்சகட்ட மனிதாபிமானம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
புலி கள் புரிந்த கொடுமைகள் கொஞ்ச நஞ்ச மல்ல. இன, மத பேதமின்றி ஏராளம் அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல் லப்பட்டார்கள்.
சந்ததி சந்ததியாக வாழ் ந்த பிரதேசங்களிலிருந்து வடக்கு முஸ் லிம்கள் விரட்டப்பட்டனர். அரசாங்கத் தைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களு மான பல அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்தார்கள்.
இப்படியாக அவர்களின் கொடுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படியான புலி களுக்குப் புனர்வாழ்வு அளிக்க அரசாங் கம் முன்வந்திருக்கின்றது. இது தான் உண்மையான மனிதாபிமானம்.
அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த நேர த்தில் பொது மக்களைப் புலிகள் புது மாத்தளனில் தடுத்து வைத்திருந்ததையும் அவர்களை மீட்கும் மனிதாபிமான நட வடிக்கையில் அரச படையினர் ஈடுபட்ட தையும் முழு உலகும் அறியும்.
அப்போது தமிழக மண்ணிலிருந்து இந்த மனிதாபி மான நடவடிக்கைக்கு எதிரான அபாண் டப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
பின் னாலிருந்து இப் பிரசாரத்தை முடுக்கிவி ட்ட இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் இப்போது இங்கு வந்து வேறு தொனி யில் பேசுகின்றார்கள்.
புலிகளுக்குப் புன ர்வாழ்வு அளிப்பதென்ற அரசாங்கத்தின் முடிவு பற்றி இவர்கள் எதுவும் பேச வில்லை. மெளனம் சாதிக்கின்றார்கள்.
அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் புனர்வா ழ்வுத் திட்டம் தவறான வழிகாட்டலு க்கு உட்பட்ட புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்ற அதே நேரம் அரசாங்கம் முன்னெடுத்த இராணுவ நட வடிக்கையின் உண்மையான நோக்கத் தையும் தெளிவுபடுத்துகின்றது.
இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நாட்க ளில் அது தமிழருக்கு எதிரான நடவடி க்கை என்றும் இன அழிப்புப் போர் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் பிரசாரம் செய்தார்கள்.
இன ஒழிப்பு யுத்தத்தை நடத்தும் எந்த அரசாங்கமும் அந்த யுத்தத்தில் தனக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்களுக்குப் புன ர்வாழ்வு அளிக்க ஒருபோதும் முன்வ ராது.
உணர்ச்சியூட்டி மக்களைத் தவறாக வழிநடத்தும் பிரசாரம் நீண்ட காலம் நிலைக்காது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
பயங்கரவாதத்தைத் தோற்க டிப்பதே அரசாங்கம் மேற்கொண்ட இரா ணுவ நடவடிக்கையின் நோக்கம் என் பதை இப்போதாவது இவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான பிரசாரங்களால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என் பதே வரலாற்று உண்மை.
இப்பிரசாரங் கள் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையை யும் தரவில்லை.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பணி முன்னால் இருக்கின்ற நிலையில், மீண்டும் வெற் றுப் பிரசாரங்களால் தமிழ் மக்கள் மீது துன்பச் சுமையைச் சுமத்தாதிருக்க வேண் டும் என்று தமிழ்த் தலைவர்களை வின யமாகக் கேட்டுக்கொள்கிறோம்.
தினகரன்






0 விமர்சனங்கள்:
Post a Comment