அடையாள அட்டை இன்மையால் பலர் வாக்களிக்கவில்லை: அமைச்சர் டக்ளஸ்
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் யாழ் மாநகரசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லையென சமூகசேவைகள் மற்றும் சமூகநலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான மக்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையே வைத்திருந்ததாகவும், எனினும், அதனைக் கொண்டு சென்றவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லையெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தேசிய அடையாள அட்டை, கடவுசீட்டு உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருப்போர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருந்தமையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், எனினும், மக்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் குறித்தவிடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
முற்பகல் வரை யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு வீதம் மிகவும் குறைவாக இருந்தமை கவலையளிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment