அரக்கனை நினைத்து அழுதனர் சில அரக்க குணம்படைத்தவர்கள்!!
அன்புதனை கசக்கியெறிந்து
அரக்ககுணத்தை சுமந்த வண்ணம்
அகிலம் உமிழ்ந்து துப்பிய
அகங்காரம் கொண்ட
ஆணவக்காரனை நினைத்து
அழுதனர் சில புலிப்பினாமிகள்
ஆயிரமாயிரம் வீரர்களை
அகழ் மண்ணுக்குள்ளே
ஆழ புதைத்து விட்டு
ஆக்கமின்றி பதுங்கி வாழ்ந்த
அறிவிலியை நினைத்து
அழுதனர் சில புலிப்பினாமிகள்
அன்னையின் மடியின் கனம்
அறியாத ஆதிமனிதன் போல்
அவதிரித்த பிஞ்சுகளை
அக்கினி சுவாலைக்கு
அள்ளி கொடுத்தவனை நினைத்து
அழுதனர் சில புலிப்பினாமிகள்
அதிர்ந்த மண் ஆறுமுன்
ஆக்கமிகு தோழர்களை
அனல் பொங்க தீயிலிட்டு
ஆறாத் துயரில் நீந்த வைத்தான்
ஆக்கரமிப்புக்கு சொந்தக்காரனை நினைத்து
அழுதனர் சில புலிப்பினாமிகள்
அண்ணன் தம்பிபோல் நம் நாட்டில்
அணைத்து கட்டி முத்தமிட்டு;
அல்லும் பகலும் பகிர்ந்துண்ட
அனைத்து இனங்களுக்கிடையே
அள்ளி விதைத்தான் பகைமை தனை
அவனை நினைத்து இங்கு
அழுதனர் சில புலிப்பினாமிகள்
ஆயிரமாயிரம் ஆயிரம் மனிதவுயிர்கள்
அரகன் நரகாசுரனால் அனியாயமாய்
அல்லும் பகலும் அழிக்கப்பட்டனர்
அதை கண்டும் சிந்தையிரங்காமல்
அவனை நினைத்தும் இங்கு
அழுதனர் சில புலிப்பினாமிகள்
அகிலத்துக்குள் நம் இனத்தை
அவலமாக்கி அகதியாக்கி
அலையவிட்டவனிவன் படத்தை ஏந்தி
அவனை நினைத்தும் இங்கு
அழுதனர் சில புலிப்பினாமிகள்
அமைதியாக இருந்த மண்ணின்
அகிம்சை தனை புவியில் புதைத்து
அனல்பொங்கும் தீயினுள்
அவதரித்த புத்தி ஜீவிகளின் பெருமைகளை
அசுத்தம் செய்தவனை நினைத்து
அழுதனர் சில புலிப்பினாமிகள
கிளியின் ஓர் கிராமத்து நாயகன்
வவீதரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment