மட்டக்களப்பில் புலி சந்தேகநபர் மரணம்
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் சரணடைந்து அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலி சந்தேக நபர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை வாவி ஒன்றில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாவற்கொடி சேனையை சேர்ந்த அப்பு எனப்படும் குணரத்தினம் விமல்ராஜ் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ரி56 ரக துப்பாக்கி உட்பட சில ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாந்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை மீட்பதற்கு வள்ளத்தில் அழைத்து செல்லப்பட்டார். அவ்வேளை வாவிக்குள் பாயமுற்பட்ட போது வள்ளம் கவிழ்ந்து மரணமடைந்துள்ளார். மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் இந்த சந்தர்ப்பத்தில் மூழ்கிய போதும் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment