வேதாளம் சொல்லும் கதைகள்
யாழ் மேட்டுக் குடி மையவாதத்தால் உருவாக்கப்பட்ட ஈழ விடுதலை அமைப்புக்களில் இருந்து நபர்கள் தன் அமைப்பில் இருந்த நபர்களை, நண்பர்களாக நடித்து தோழன் என்று அன்புடன் அழைத்துக் காட்டிக் கொடுத்து கொலை செய்த வரலாற்று நிகழ்ச்சியின் கடைசி அத்தியாயம்தான் பிரபாகரனதும் அவரின் சகபாடிகளின் கொலைகளும் ஆகும்;. பிரபாகரன் தொடங்கிவைத்த இக்கொலைக் கலாச்சாரம் பிரபாகரனின் உயிரை குடித்து முடிவடைந்திருக்கிறது.. தன்வினை தன்னைச் சுடும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். பல உயிர்களை துரோகிகள் என்று கூறி தலையில் சுட்டுக்கொன்றதன் விளைவு அதே பாணியில் பிரபாகரனின் உயிரும் பறிக்கப்பட்டிருக்pறது.
பிரபாகரன் மரணமாகிவிட்டதாக இலங்கை அரசு கூறியது. இப்படி பல வெளி நாட்டு ஊடகங்களும் (ஆங்கில-தமிழ்) இலங்கை அரசை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டன. இருந்தாலும் இலங்கையில் நடைபெற்ற சண்டையில் இடம்பெற்ற பல சம்பவங்களை நேரில் பார்த்தமாதிரி செய்திகளை வெளியிட்டார்கள். அமெரிக்கா அனுப்பிய செய்மதி கூட படம் எடுக்கவில்லை.
சில வெளிநாட்டு அரசுகளும், தமிழ் ஆங்கில வெளிநாட்டு ஊடகங்கள் பிரபாகரன் சிறந்த வீரன், தலைவன் என்றும் மாயைத் தன்மையை உருவாக்கியதன் விளைவாக இவர்களுக்கு ஏற்ப்பட்ட பயம் காரணமாக (இறந்த பின்பும் கூட) மரணமான செய்தியை நேரடியாக கூற முடியவில்லை. இப்படியான மாயை, பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் உண்மை என்று உருவாக்கியவர்கள்தான் இந்த ஊடகங்கள்.
யாழ் மேலாதிக்க மேட்டுக் குடியினர்களும்தான். பிரபாகரனைச் சுற்றிப் பொய்யான மாயையான செய்திகளைப் பரப்பினார்கள். இதன் விளைவும், யாழ் மேட்டுக்குடிகள் என்று கருதும் (வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்) தமிழர்கள் பிரபாகரனின் தோல்வி; தங்களுக்கு ஏற்பட்ட தோல்வியாகவும், அவமானமாகவும் கருதுவதால் பிரபாகரனின் மரணத்தை ஏற்க மறுக்கின்றார்கள். இதற்காக பெருங்கதையாடல்களை கட்டவிழ்த்து விடுகின்றார்கள்.
இதனால்த்தான் பிரபாகரனின் மரணத்தில் பலவிதமான வதந்திகளும், பெரும் கதையாடல்களும் உலவுகின்றது
1:- :பிரபாகரன் அரச படையிடம் சரண் அடைந்தபின் கொல்லப்பட்டாரா.?
புpரபாகரன் உலகத்தில் உள்ள விடுதலை வீரர்களைவிட மாபெரும் வீரன் என்று எண்ணிய வெளிநாடுகளில் வாழும் யாழ் மேலாதிக்க மேட்டுக்குடித் தமிழர்கள், சரண் அடைவது கோழைத்தனம் என்று கருதுவதால் பிரபாகரனின் மரணத்தை ஜீரணிக்க முடியவில்லை. ஆடங்காப்பற்று, தேசப்பற்று, அக்கரைப்பற்று எனப் பல பெயர்கள் மூலம் பிரபாகரனை காப்பாற்ற போராட்டங்கள் நடத்தினார்கள். இப்போராட்டங்கள் தோல்வியில் முடிந்ததால் அதை ஜீரணிக்க முடியாமல், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பெருங் கதையாடல் கதைகளாகக் கூறுகின்றார்கள்.
படையினரிடம் பிரபாகரன் சரண்; அடைந்து இருந்தால் அவர் உடல் சல்லடையாக போய் இருந்து இருக்கும்.
படையினர்கள் அருகில் நின்று பிரபாகரனையும், சகபாடிகளையும் தலையில் சுட்டு இருக்க முடியாது. இதற்கு ஒரு இராணுவ மேல் அதிகாரிகளிடம் பிரபாகரன் தனியாகச் சரண் அடைந்து இருந்தால் இக்கொலை சாத்தியப்பாடாக அமைந்திருக்கும். அப்படியான இராணுவக் கட்டமைப்பு இருக்க வில்லை. பிரபாகரன் தனிமனிதனாக சரண் அடைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கவில்லை, (அவர் மகன் இருந்தபடியால்) ஒரு இராணுவ அதிகாரியுடன் பலர் சரண் அடைவது என்பதும் தலையில் சுடுவது என்பதும் சாத்தியக்கூறுகள் இல்லை. அப்படி நடந்தால் படையினர் மத்தியில் பல குழப்ப நிலை உருவாகியிருக்கும். பல குழப்பங்கள் நிகழ்ந்திருக்கும். இன்றுவரை படையினர்கள் தங்கள் பல நண்பர்களை இழந்த வெறியுடன் பயங்கரவாதத்தை அழிக்க சண்டையிட்ட படையினரின் மனோ நிலையை புரிந்து கொன்டால் போதும். மாவீரனான பிரபாகரனுக்கு அடுத்தடுத்து தோல்வியைக் கொடுத்தவர்கள். புலிகளை பலவீனப்படுத்தியவர்கள்
யார் குறுக்கீடு செய்தாலும் புலிக்கு எதிரான சண்டையை நிறுத்தமாட்டோம் என்ற மனோநிலையில் இருந்தவர்கள், இதனால் பல வெளிநாட்டவர்களின் தலையீடு தோல்வியில் முடிந்தது.
2:- பிரபாகரன் இராணுவத்துடன் மோதலின்போது கொல்லப்பட்டாரா?
புடையினருடன் மோதியிருந்தால் அவரின் உடல் சின்னாபின்னமாகப் போய், அடையாளம் காணமுடியாத நிலையில் இருந்திருக்கும். அதற்கான அறிகுறிகளும் இல்லை. சண்டைக் காலத்தில் இறந்து போன மக்களின் உடல்களைப் பார்த்தால் உண்மை புரியும்
3:- புலித் தலைமைக்குள் ஏற்பட்ட முரண்பாட்டை தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திய வெளிநாட்டுப் புலி முகவர்களின் பணிப்பின் பெயரில் பிரபாகரனும் மற்றவர்களும் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாமா?
புpரபாகரனுடன் நெக்கி; இருந்தான். பக்கத்தில் இருந்த நபர்தான் இவர்களை தலையில் சுட்டுக் கொன்று இருக்கவேண்டும். இந்நிகழ்வு முரண்பட்ட புலித் தலைமைக்குள்தான் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். கொல்லப்பட்ட பின்பு வெளிவந்த அறிக்கைகளை பார்த்தால், இது உண்மை என்று கூறமுடியும்.
முன்பு புலிகள் பலரை துரோகிகள் என்று கூறி தலையில் போட்ட விதமானதாகவே அமைந்திருந்தது. யார் இதைச் செய்தார்கள்?. உடல் கண்டு பிடிக்க முடியாத பொட்டம்மானாக இருக்கலாம். பழைய பகைகளைத் தீர்த்து இருக்கலாம். ஏனென்றால் பொட்டம்மானின் உடல் காட்டப்படவில்லை. பெயரைக் கூறினார்களேயொழிய உடல் காட்டப்படவில்லை. ஓவ்n;வாருவருடைய பெயர்களைக் கூறும்; போதும் உடல் காட்டப்பட்டது. பொட்டம்மானின் பெயரைக் கூறும்போது பிரபாகரனின் மகனுடைய உடலையும் வேறு ஒருவரின் உடலையும் காட்டினார்கள். நீங்கள் இது சம்பந்தமான வீடியோக்களை எல்லா இணையத் தளங்களுக்கும் சென்று பார்வையிட்டால் உண்மை புரியும்.
நான் கூறிய விடையங்களை அலட்சியப்படுத்தி விசுவாசமாக நடந்ததன் விளைவுதான் பிரபாகரன் கொலைக்கு காரணம் என்ற தொனியில் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்ட வந்த கருணா கூறினார். உண்மையாகவே பொட்டம்மான் சரண் அடைந்திருந்தால் அவர் தற்கொலை செய்ததற்கு சமனாகும். அவரின் உடலை காட்டும் வரை இச் சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கும்.
யாருடன் கதைத்தார் என்ற விடையத்தை அலசிப் பார்த்தால் உண்மை புரியும்.
பிரபாகரனும் ,சகபாடிகளும் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட விதத்தை இன்று அமைதியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் சகல ஈழ விடுதலை அமைப்புகளில் (புலிப் போராளிகள் உட்பட) உள்ள போராளிகளுடன் கதைக்கும் போது அவர்கள் கூறியதை ஆராயும்போது வந்த தரவுகள், நியாயப்பாடுகள் நம் எண்ணப்பாட்டை சரி என்று நிரூபணமாக்குகின்றது.
சில முன்னணித் தலைவர்கள் சகல பிரதேசங்களையும் இழந்து தோல்வியடைந்த நிலையில் தாங்கள் சரணடையப் போவதாகக் கூறியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். (பானு போன்றவர்கள்).
இன்றுவரை சில தலைவர்கள் அன்று நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக பெயர்கள் வெளிவரவில்லை. ஏற்கனவே அவர்கள் கொல்லப்பட்டதாகவோ அல்லது ஓடி விட்டதாகவோ கூறப்படவில்லை. இதற்கு காலம்தான் பதில் கூறும். (பானு,ஆஸ்தானக் கவியன், பாலகுமார் போன்றவர்கள்).
இந்த நிலையில் தாங்கள் படையினரிடம் சரண் அடையப் போவதற்கு (சண்டை உக்கிரம் அடையும் போது) தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கு உதவும் படி கேட்டுக் கொண்டார்கள் என்று கருணா முன்பு குறிப்பிட்டார். (பலர் தன்னிடம் கதைத்ததாக கூறினார். கருணா கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.).
இந்தப் புலித் தலைவர்கள் சிலர் சிறைப் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஒரு வதந்தியும் உண்டு.
புலியின் சர்வதேசப் பொறுப்பாளரும், நோர்வேயும் இலங்கை அரசுடன் 18 மணித்தியாலம் பிரபாகரன் சரண் அடையும் விடையமாக தொலைபேசியில் கதைத்து, பிரபாகரன் சரணடைய சம்மதம் என்று கூறியதாக கே.பி. கூறியுள்ளர். (ஹிட்லரின் மனோ நிலையுடையவன்தான் பிரபாகரன். இதைப் புரியாமல் கே.பி.உளறுகின்றார்.)
இதே சமயம் வேறு சிலர் பிரபாகரன் நந்திக் கடலில் உள்ள சுரங்கப் பாதை மூலம் (ஒல்லாந்தர் காலத்தில் கட்டிய) 2000 போராளிகளுடன் தப்பி வில்பத்தைக் காட்டுக்குச் சென்றுவிட்டதாகவும், பிரபாகரன் தன்னுடன் கதைத்ததாக வை.கோவும் நெடுமாறனும் கூறியுள்ளார்கள். தாங்கள் 18 மணித்தியாலம் (17ம் திகதி) கதைத்ததாகவும் கூறினார்கள். (பிரபாகரனும் சகல தலைமைகளும் மரணமாகிவிட்டர்கள் என்றும், ஈழச் சண்டை முடிவு அடைந்துவிட்டது என்றும் அரசு அறிவித்த சமயம்.)
இதை உணர்ந்த நடேசன் போன்ற தலைவர்கள் தப்பித்து படையினரிடம் சரணடைய முடிவு செய்து வெளியேறிய சமயம் அவர்களைக் காட்டிக் கொடுத்ததன் விளைவு படையினர்கள் அவர்களை செல்லடித்து அழித்தார்கள். அவர்களின் உடல் சின்னா பின்னமாகி அடையாளம் காண முடியாத அளவுக்கு மரணமானார்கள்.
நக்கீரன், பிரபாகரன் இந்தியாவில் இருந்து கொண்டு, தான் கொல்லப்பட்ட செய்திகளை தொலைக்காட்சியில் பார்ப்பது போன்ற ஒரு படத்தை பிரசுரித்தார். இந்த மூன்று குழுவினரும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறினார்கள். இவர்கள் முரண்பாடான தகவல்களை வெளியிட்டார்கள்.
பிரபாகரனின் செல்போனும் இடைப் பட்டியும் படையினர் கைப்பற்றியதை தொலைக்காட்சியில் காண்;பித்ததை இவர்கள் இதை அவதானிக்கவில்லைப் போலும். அல்லது உலக மக்களை முட்டாள்கள் என்று கருதியிருக்க வேண்டும்.
இது விடையமாக ஒரு இணையத் தளத்தில் நல்ல திரைக் கதை எழுதியுள்ளது. அதை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்..
புறம் போக்கு நிலத்தை பணம் படைத்த அதிகார நபர்கள் தன்னுடையதாக்கி பயிரிடுவார்கள். வெளிநாடுகளில் வாழும் யாழ் மேட்டுக்குடியினர்கள் ஒரு புறம் போக்கு நிலம் போன்றவர்கள்தான்.
கே.பி. வைகோ, நெடுமாறன் நக்கீரன் போன்றவர்கள் நடந்துகொண்ட விதம், அவர்கள் விட்ட அறிக்கைகள் பிரபாகரன் கொலைக்குச் சூத்திரதாரிகள் ஆவார்கள். அத்துடன் பல பெரும் கதையாடல்களை கூறினார்கள். அதில் ஒன்றுதான் நடேசனின் மனைவி (முன்னை நாள் பொலிஸ் அதிகாரியாகவும், தென் இலங்கையில் பிறந்தவர், மகிந்தாவின் உறவினர் என்று கூறப்படுகின்றது) நாங்கள் சகலரும் சரணடையப் போகின்றோம், அதற்கு உதவும்படி ராஜபக்சாவிடம் ஒப்புதல் பெற்றதாகவும் அவர் எந்த வழியாக வந்தால் சரணடைய முடியும்; என்றும் வழி கூறியதாக ஒரு கதை கூறுகின்றது. இந்த நிலையில் நடேசன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராக நீங்கள் துரோகம் செய்துவிட்டதாக மனிதாபிமானமாக நடந்து கொள்ளவில்லை என்றும் வாக்குவாதப்பட்டதாக பெரும் கதையாடல்களை கூறினார்கள். இந்; நிகழ்வுகள் 16, 17, 18, ம் திகதிகளுக்குள் இடம் பெற்றவை. இந்த நேரம் 250 மீற்றர் தூரத்தில்தான் படையினர் நிலை கொண்டிருந்தார்கள். (அவ்விடத்தை சுற்றி .வளைத்து முற்றிகையிட்டு இருந்த சமயம். 17 ம் திகதி அதிகாலை இவர்கள் கொல்லப்பட்டுவிட்டதான செய்தி கசிந்துவிட்டது.)
ஜதார்த்தமான உண்மைகளை மறைப்பதற்கு வைகோ, நெடுமாறன், நக்கீரன் கே.பி. போன்றவர்களின் வெளியீடுகள், வாக்கு மூலங்கள் தங்களின் சூழ்ச்சிகளை மறைப்பதற்காக விடப்பட்ட அறிக்கைகள் ஆகும்
பிரபாகரனும் சகபாடிகளும் தலையில் சுடப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது 1 அல்லது 2அடி அல்லது பக்கத்தில் நிற்கும் தூரத்தில் நின்றுதான் சுட்டிருக்க வேண்டும். (இது ஒதுங்கி வாழும் ஈழ ஆயுதப் போராளிகளின் கூற்று.)
புலி அமைப்பின் தலைமைப் பதவியை தனதாக்கிக் கொள்ளவும், பிரபாகரனின் ஆதிக்கத்தால் உருவாக்கப்பட்ட சகல சொத்துக்களையும் தம் வசப்படுத்திக் கொள்வதற்குமாக பிரபாகரன் கொலை. செய்யப்பட்டார்.(தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக அல்ல.) பல கதைகளை கூறுகின்றார்கள் 250 புழு ஒ வெடி மருந்தை சுமந்து கொண்டு தற்கொலைப் படை பெண் போராளிகள் (2000பேர்) படைகள் மீது தாக்குதல் நடத்தியதால் 25000 படையினர்கள் கொல்லப்பட்டதால் (250 புழுஒ வெடி மருந்தை சுமக்க முடியுமா? என்று சிந்திக்கும் ஆற்றல் மிக்க தமிழர்கள்) படையினர் பயந்து ஒடிப் பின்வாங்கிய சமயம்தான் பிரபாகரனும் போராளிகளும் தப்பியதாக பெரும் கதையாடல் ஒன்றைக் கூறிகின்றார்கள். இப்படியான பெரும் கதையாடல் மூலம்தான் புலி அமைப்பு கடந்த 30வருட காலம் வளர்ச்சி அடைந்தது. இப்படித்தான் பொன்னம்பலம் விண்ணன் பொன்னனானான், செல்வா தந்தையானார், அமிதர் தளபதியானார், பிரபாகரன் அலச்சாண்டர் ஆனார். ஸ்ராலின் ஆனார், லெலின் ஆனார், மாஓ ஆனார்.
இதற்கு பிரபாகரனின் போராட்டத்தைப் பற்றி கருணாவைக் கேட்டால் உண்மை புரியும்.
பெரும் கதையாடல் மூலம் பிரபாகரனை அதி சக்தி வாய்ந்த தலைவர் ஆக்கினார்கள். அதே பெரும் கதையாடல்தான் பிரபாகரனின் மரணத்தை தீர்மானித்திருக்;கின்றது.
கே.பி. யின் திருவிளையாடலால் இவர்கள் படையினரிடம் மாட்டி இருக்கவேண்டும்.
இதனால் படையினர் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். ஆனால் இன்று அரசை உலக நீதி மன்றத்துக்கு நிறுத்த வேண்டும் என்றும் இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமைகள் மீறப்பட்டதை விசாரிக்க வேண்டும் என்றும் உலக அமைப்புக்களும், வெளி நாட்டு அரசுகளும் (வெளி நாட்டில வாழும் தமிழர்கள் நடத்தும் போராட்டங்கள்;) இலங்கை அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்கள், பிரபாகரன் பிடிபட்டு இருந்தால் அரசு தனக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து (கருணா விடையத்தில் இலங்கை அரசு நடந்த விதத்தை நினைவு கூறுகின்றேன்) தங்களை விடுவித்துக்கொள்ள இந்திய அரச உதவியுடன் இலங்கை அரசு புலித் தலைமைத்துவத்தை நீதிக்கு முன் நிறுத்தி தங்களுக்கு ஏற்பட்ட அவப் பெயரைப் போக்குவித்திருக்க முடியும். புலிகளின் சகல செயற்பாடுகளையும் செயல் இழக்க வைத்து படையினர் பலம் பொருந்திய கால கட்டத்தில் இலங்கை அரசு எதற்காக இக்கொலைகளைச் செய்ய வேண்டும்.?
போதுமடா சாமி போதுமடா என்ற நிலையில் வாழும் தமிழ் பேசும் மக்கள் (சகல இலங்கை மக்களும்) இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தோன்றுவதற்கு இடமே அளிக்கப்போவதில்லை இது போன்ற பயங்கரவாதம் உருவாக இன்னும் 30 வருடங்களுக்கு மேல் தேவைப்படும். பயங்கரவாதத்தின் உலக வரலாற்றை புரட்டினால் உண்மை புரியும். பயங்கரவாதம் அழிந்தது அழிந்ததுதான்.
இதற்கு காலம்தான் பதில் கூறும். இப்புலித் தலைமை உயிருடன் இருந்தால் மீண்டும் பயங்கரவாதம் உருவாகும் இதனால் மனம் சஞ்சலப்படும் சில தமிழர்கள் உண்டு.
(அந்தப் பயங்கரவாதத்தை அனுபவித்த தமிழர்கள் ஆதங்கம். இப் பயங்கரவாதம் வெளி நாட்டில் வாழும் யாழ் மேட்டுக்குடிச் சிந்தனைவாதிகளால் ஏற்றுமதி செய்யப்படலாம் என்று ஒருசாரரால் அச்சம்).
மேல் கூறப்பட்ட முதலாவது விடையம் சாத்தியப்பாடு இல்லை. இரண்டாவது, இவர்கள் படையினருடன் சண்டை போடவில்லை என்பது உண்மை. இவர்களின் மரணச் செய்திகள் மூன்றாவது சாத்தியப்பாட்டுக்கு உண்டு. இதற்கு இவர்களால் கூறும் பெரும் கதையாடல்கள் பலரின் வாக்குமூலங்கள் சாத்தியப்பாட்டை பலப்படுத்துகின்றது. புலித் தலைமைக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் மூல காரணமாகும். (சரணடையும் விடையமாக ஏற்பட்டவை).
கே.பி. இப் புலித் தலைமையைக் காப்பாற்றிய எண்ணத்தில், தலைமையை சரணடைய வைக்க எடுத்த முயற்சி சந்தேகத்தை எழுப்புகின்றது. கே.பி. யுடன் கதைத்த சில தலைமை (பிரபாகரனுடன் அல்ல) தப்பி ஒட (அம்புலன்ஸ் இல்) முயச்சித்த போது படையினருக்குக் காட்டிக்கொடுத்து படையினரின் தாக்குதலில் சின்னாபின்னமாகக் கொல்லப்பட்டார்கள். (நடேசன் மனைவி, போன்றவர்கள்). (இவர்கள் உயிருடன் இருந்தால் தாங்கள் தலைவராக வர முடியாது என்பதால் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.)
இதற்கு சற்று முன்னர் புலிகள் இருந்த இடத்தில் சிறிய நிலப்பரப்பில் பாரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டதாக கூறப்படுகின்றது இந்த வேளையில் இவ்விடத்தில் கடைசியாக இருந்த மக்கள் வெளியேறினார்கள்.
இவர்களுடன் வெளியேறி சாதாரண புலிப் போராளிகள் 1000க் கணக்கில் படையினர்களிடம் சரணடைந்தார்கள். இதன் பின் புலித் தலைமையின் சடலங்களை படையினர் கைப்பற்றினார்கள். தலையில் சூடு வாங்கிய தலைமைச் சடலங்களை கண்டுபிடித்தார்கள் (ஓரே இடத்தில்). இது எப்படிச் சாத்தியமாகும் இவர்கள் படையினருடன் சண்டைப்படவில்லை என்பதை இவர்களின் உடல் காட்டுகின்றது. படையிடம் சண்டையிட்டு இருந்தால் இவர்களின் உடல் சல்லடையாக இருந்திருக்கும்.
இவர்கள் கொண்டு வந்த பணம் சுக்கு நூறாக போயிருக்கும்.
பிரபாகரனையும், மகனையும் மற்றவர்களையும் தலையில் சுட்டுவிட்டு அவர்கள் பக்கத்தில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு (துரோகிகள் என்று கூறி) சுட்டவர் சரண் அடைந்தார். இந்தச் சமயம் வேறு பாதையால் சரணடையச் சென்ற வேளையில் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று கதை கூறப்பட்டது. அவர்களிடம் பணம் இருக்கவில்லை. உடல்கள் சின்னாபின்னமாகிக் கிடந்தன. படையினர்கள் சகல புலித் தலைமையையும் அழித்துவிட்டதாகக் கூறியது. சரணடைi முடிவு கட்டினார்கள்.
பிரபாகரனின் மகன் உயிருடன் இருந்தால் புலி அமைப்புக்கு அவர் தலைவனாகி விடுவார் என்பதற்காகச் சுடப்பட்டார். பிரபாகரனின் குடும்பத்தில் எஞ்சியவர்களை படையினர் அழித்துவிட்டதாகக் கூறினார்கள். இதை அரசு மறுத்துவிட்டது. இதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவர் குடும்பத்தில் யாராவது உயிருடன் இருந்தால் தலைவனாக்கிவிடுவர்கள் என்பதாலும் குடும்பமே இறந்து விட்டதாகக் கூறுகின்றார்கள். அவர்களும் கொல்லப்பட்டுவிட்டார்களா அல்லது கொல்லப்படப் போகின்றார்களா என்பதை காலம்தான் கூறும். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை
இதனால் ஈழச் சண்டை முடிவுக்கு வந்தது.
பிரபாகரன் இறந்தது ஈழ முகவர்களுக்குப் பிரச்சனை அல்ல. அவ்வமைப்பின் சகல சொத்துக்களும் யார் ஆழுவது என்பதுதான்; பிரச்சனையாகும்.
இதனால் புலி அமைப்புக்கு கே.பி. தன்னைத் தலைவராக கருதி பிரபாகரன் இறந்து விட்டதாக அறிக்கை விட்டார். இதை எதிர்த்து கே.பி. யை துரோகி என்று வைகோ போன்றவர்கள் அறிக்கை விட்டார்கள். இச் சொத்துச் சண்டையில் புலி அமைப்பின் ஈழ வியாபாரிகள் இரு துருவமாகச் செயற்படத் தொடங்கிவிட்டார்கள். (ஒன்றாகச் செயல்ப்பட்டவர்கள் பணம் சொத்து விடையத்தில் ஏதிரிகளாக மாறிவிட்டார்கள்.
ஒன்றுபட்டு பிரபாகரன் மரணத்தை மறைத்து, உயிருடன் இருக்கின்றார் என்று கூறியவர்கள் இன்று அவர்கள் எதிரிகளாகிவிட்டார்கள். அதற்காக பல கதைகளை புனைகின்றார்கள்.
பிரபாகரனை இராணுவம் பிடித்து சித்திரவதை செய்வதை பார்க்க முடியாதபடியால் நான் (பொட்டம்மான்) அவரை சூட்டுக் கொன்றேன், இதனால் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நன்மை உண்டு. மீண்டும் புலி அமைப்பை கட்டி எழுப்ப சாதகமாக அமையும் என்று கூறினார் ஏன்று ஒரு கதை கிளப்பிவிட்டுள்ளார்கள். இக் கதை மூலம் பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள். புலி அமைப்பை மீண்டும் கட்டி எழுப்புவது பொட்டம்மானா? கே.பி. யா? கே.பி. யின் எதிர்க் குழுவினர் மீண்டும் ஈழப் பயங்கரவாதத்தை கட்டி எழுப்புவது என்று உறுதியாக வெளிநாடுகளில் வாழும் யாழ் மேலாதிக்க மைய வாதிகள் திடசங்கம் பூண்டுள்ளார்கள்.
இனிவரும் காலத்தில் அன்று சுவிஸ் நாட்டில் புலிகளின் பணப் பிரச்சனையால் ஏற்பட்ட கொலைகள் மாதிரி பல வெளிநாடுகளில் இடம்பெறலாம்.
பிரபாகரனால் கொல்லப்பட்ட நபர்களுக்கு அனுதாபம் தெரிவிக்க ஒரு கூட்டம் இருந்தது. அமைப்பு இருந்தது. ஆனால் பிரபாகரனுக்கு யாரும் இல்லாத நிலையில் யாரும் இல்லாத அநாதையாகிவிட்டார். பிரபாகரனை உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழர்களின் ஏகபோகத் தலைவர் ஆக்கியவாகள் அடுத்த தலைவர் இன்டப்போலால் தேடப்படும் நபரா? அல்லது இந்தியத் தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்ட நபர்களா? ஈழ முகவர்களா? இதற்கு காலம்தான் பதில் கூறும். அல்லது பயங்கரவாதம் அழிந்து போகுமா?.
பிரபாகரன் உயிருடன் இருப்பாதாகக் கூறி பணம் சம்பாதிக்கும் வெளிநாட்டில் யாழ் மேட்டுக்குடிக் கூட்டம் இருக்குமட்டும் பிரபாகரன் உயிருடன் இருப்பார்.
வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பல பெயர்களில்; நடத்திய போராட்டங்கள் இலங்கைத் தமிழர்களை வெளி நாட்டவர்கள் பாபேரிகள் என்று கூற வைத்தார்கள்
யாழ் மேலாதிக்க மேட்டுக்குடி சிந்தனைவாதிகள் பிரித்தானியர்களுக்கு அன்று ஏழை யாழ் மக்களை தீண்டத் தகாதவர்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும் கூறி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். இன்று வெளிநாடுகளில் புலி ஆதரவான போராட்டங்களை நடத்தி தங்களை பாபேரியர்கள் என்று கூற வைத்துள்ளார்கள். இனி இடம் பெறும் சொத்துச் சண்டையால் தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூற வைப்பார்கள்.
வெளி நாடுகளில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் அறிவு ரீதியாகவும், விழிப்புடன் செயல்ப்பட்டால்; தங்களையும், தங்கள் பிள்ளைகளையும் காப்பாற்றி தமிழர்கள் சிறந்த குடி மக்கள் என்ற பெயரை அடையமுடியும். இது உங்களுக்கு புதுமையானது அல்ல.
குறிப்பு:- பிரபாகரனும், மகனும் மற்ற நபர்கள் மரணமானவுடன் வெளி வந்த படங்களையும், நடேசன் குழுவினர் மரணமானவுடன் வெளியான படங்களையும், பானு போன்றவர்கள் மரணமானவுடன் வெளி வந்த படங்களையும் ஒரு தரம் பார்வையிட்டால் உண்மைகள் புரியும். அதில் பொட்டம்மான் இருக்கின்றாரா என்று தேடிப் பாருங்கள்.
(சண் அண்ணா)
0 விமர்சனங்கள்:
Post a Comment