தமிழர்களின் பன்பாட்டையும், மானத்தையும் எழுச்சியையும் சுவிசர்லாந்து புலிபினாமிகளே தமது சோனகிரித்தன்மையால் படுகுழியில் தள்ளியவர்கள் என்ற விசனம்
இன்றைய இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்து இப்போதும் புலம் பெயர் தமிழர் காத்திரமானவர்களா என்ற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள், உங்களுக்குக் கிடைக்கும் விடை பூஜ்ஜியமாகவே இருக்கும்.
புலிகளின் தோல்வியோடு புலம் பெயர்ந்த தமிழர் அதிகாரமற்ற குழுவினராகப் போய்விட்டார்களா என்ற கேள்வியையே இன்றைய நிகழ்வுகள் எல்லாம் புடம் போட்டுக் காட்டுகின்றது. புலம்பெயர்ந்தவர்கள் புலிகளின்பெயரைவைத்து நடத்திய போக்கிரித் தனத்தால் தமிழர்களின் விடுதலை விவச்சாரமானது என்பதை பலதடவைகள் பலர் விமர்சித்து வருகின்றார்கள்.
இதனை என்றும் பலவழிகளில் பிரச்சாரத்தில் „ஈரனல்“ முன்னெடுத்துள்ளது. ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் தமது சுயநலத்திற்காக தொடர்ந்தும் விட்டபிழையை செய்து கொண்டே உள்ளார்கள். இன்று சுவிசர்லாந்தில் இருந்த புலிப்பிரதிகள் திசைதெரியாது மறைந்து விட்டார்கள். பணத்தையே தமது சுயநலமாகக் கருதி பல்லைக் காட்டியவர்கள் பல்லாயிரம் லட்சமோசடிகளை செய்துவிட்டு தலைமறைவாகிக் கொண்டார்கள் இது எமது உறவுகளுக்கு செய்த பச்சைத் துரோகம். மண்என்றார்கள் மற்றவர்கள் மேல் துரோகப் பழிசுமத்தினார்கள் பல வழிகளில் புலிகள் அல்லாதவர்கள் நாட்டில் இருக்க அருகதியற்றவர்கள் என்றார்கள்
ஆனால் பணத்திற்கும் பதவிக்கும் தமது குடும்பத்திற்கு கௌவுரவம் வேண்டும் என்பதற்காகவே மாற்றான் காலை நக்கித்திரிந்த இந்த போலிபுலிகள் இன்று சமூகத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள் என்றே கூறமுடிகின்றது. நேர்மையான முறையில் சீரான வழிகளை அமைத்து புலிகளின் தரத்தை உயர்திய சுவிசர்லாந்து பிரதி நடராஐன் முரளிதரன் மீது விவச்சார பட்டத்தை சுமத்தி நாட்டைவிட்டு துரத்திய பின் சுவிசர்லாந்தில் புலிகள் நடத்திய அத்தனை முன்னெடுப்புக்களும் மக்களை ஏமாற்றிய செயல் பாடுகள் என்பதை „தமிழ் ஏடு“ என்ற சுவிசர்லாந்து பத்திரிகை பகிரங்கமாகவே வெளிக் கொண்டு வந்தது.
ஆனால் தாலியை, சங்கிலியை களட்டி போட்டு சமூகத்தின் அதாவது தமிழர்களின் பன்பாட்டையும், மானத்தையும் மற்றைய வீரத்தையும் மனதால் வளத்து வந்த எழுச்சியையும் இந்த சோனகிரிகள் தமது சோம்பேரித்தனத்தால் படுகுழியில் தள்ளியவர்கள் சுவிசர்லாந்து புலிபினாமிகளே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று இன்று சுவிசர்லாந்து தமிழ் ஆர்வளர்கள் கடும் விசனத்தை தெரிவித்து வருகின்றார்கள்.
ஈரனல்
0 விமர்சனங்கள்:
Post a Comment