நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி?
காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி அவர்களின் முன்னிலையில் நடிகர் விஜய், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். அவருக்கு அகில இந்திய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் முனைப்பாக இறங்கி உள்ளார். இதற்காக இளைஞர் காங்கிரஸ் தேர்தல், அவரது மேற்பார்வையில் நடந்து வருகிறது.
நடிகர் விஜய், கடந்த 24ம் திகதி டில்லியில் ராகுலை காந்தி அவர்களைச் சந்தித்துப் பேசினார். தன் ரசிகர்களை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரசில் இணைய விஜய் விரும்பியுள்ளார். இருவரின் சந்திப்புக்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு வாசன் உறுதுணையாக இருந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைவதன் மூலம், வரும் 2011ம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும் என காங்கிரசார் நம்புகின்றனர். “காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம்’ என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் முன்னிலையில், விரைவில் விஜய் இணைகிறார். பின், தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களின் ஆதரவோடு மாநாடு நடத்தி அதில், ராகுல் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்களை பங்கேற்க வைக்கிறார். அம்மாநாட்டில் பங்கேற்கும் தனது ரசிகர்களை, காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொள்ளவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.திரையுலகில் இந்த தலைமுறை இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக நடிகர் விஜய் வலம் வருவதால், அவரது வரவு கட்சிக்கு பலத்தைத் தரும் என காங்கிரசார் கருதுகின்றனர். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரசார பீரங்கியாக விஜயை பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் அவருக்கு வழங்கப்படலாமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment