இப்படியும் ஒரு தகவல் !!!!
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
பிரித்தானிய டெலிவிசன் காட்டிய கொடிய கொலை நிகழ்ச்சிப் படத்தின் உண்மை என்ன?
25ம் திகதி மாலை பிரித்தானியாவின் சனல் 4 தயாரிப்பாளர்கள் இலங்கைத் தமிழர்களை இலங்கை இராணுவம் எப்படி ஈவிரக்கமின்றிக்கொலை செய்கிறார்கள் எனற செய்தியைக் காட்டியது. தமிழர்கள் மட்டுமன்றி அந்தச் செய்தியைப்படித்த அத்தனைபேரும் கண்ணீர் விட்டார்கள். அந்தப் படத்தை இலங்கையைச் சேர்ந்த ஊடகவாதிகள்(சிங்களவர்கள்) தங்களுக்கு அனுப்பியதாக அந்த நிகழ்ச்சிக்குப் பொறுப்பானவர் கூறினார். அத்துடன் இந்தப்படத்தை ஒரு சிங்கள புத்தி ஜீவியிடம் காட்டி, இதுபற்றிய உண்மைத்தன்மையைக் கேட்டபோது அந்தப் படத்தில் பேசப்படும் சிங்களம் சிங்களவர்பேசும் சுத்தமான சிங்களம் என்றும் அதனால் அந்தப் படத்தில் துப்பாக்கியுடன் நின்று கொலை செய்பவர்கள் இலங்கைப் படையினர் என்று அவர் கூறியதாகவும் சொல்லப் பட்டது.
அந்தச் செய்திப்படத்தைப் பார்த்த பலர் திடுக்கிட்டார்கள் இந்தக்கொடுமையைச்செய்த இலங்கை அரசுக்கு உடனடியாப் பாடம் படிப்பிக்கத் துடித்தார்கள். அந்தப் படம் உலகின் பல பாகங்களிலும காட்டப்பட்டது. மனித நேயவாதிகள் இலங்கை அரசுக்குத் தங்கள் ஆத்திரத்தைக்காட்டத் துடித்தார்கள்;.
உடனடியாகப் பல மனித உரிமை ஸ்தாபனங்களுடன் தொடர்பு கொண்டு இலங்கையை மனித உரிமை மீறல் சட்டத்துக்குள் நீதி மன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். பிரித்;தானியச் செய்திச் சனல் 4ல் காட்டப்பட்ட விடயம் உண்மையில்லை என்ற இலங்கை தூதுவரகம் உடனடியாக மறுப்புத் தெரிவித்தது;.
போர்நடந்து இவ்வளவு காலத்திற்பின் இதை ஏன் புலிகள் காட்டுகிறார்கள் என்று சிலர் சிந்தித்தார்கள். அரசாங்கத்துக்கு எதிராக எத்தனையோதரம் பல மோசடிப் படங்களைப் பல தடவைகளில் காட்டிய புலிகள், போர் முடிந்து மூன்று மாதத்தின்பின் இதை வெளியிடுவதால் என்ன பிரயோசனம் என்று பலர் கேள்விகளைத் தங்களுககுகள் எழுப்பிக்கொண்டார்கள்.
கடந்த இரு நாட்களாகப் பல மட்டங்களிலிருந்தும் இந்த செய்தி பற்றிய உண்மையறியும் ஊடகவாதிகள் பல தொடர்புகளை ஏற்படுத்தி விடயங்ளை அலசினார்கள்.
இந்தப் படத்தில் கொலை செய்யப்படுவது தமிழர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. செய்பவர்கள் யாhர் என்பது இக்கட்டுரையைப்படித்தால் புரியும். ஐனவரிதமாதம் நடுப்பகுதியில்புலிகள் தங்கள் இடங்களை இலங்கைப் படையினரிடம் பறிகொடுத்துக்கொண்டு பின்வாங்கும்போது, புலிகளால் சிறை படிக்கப் பட்டிருந்த பல தமிழர்கள் அவர்கள் சித்திரைவதை முகாம்களில் சொல்லாவொண்ணாத் துயரை அனுபவித்தார்கள்.
தோல்வி கண்டு பின்வாங்கிக் கொண்டு ஒடிய புலிகள் தங்களால் சிறை படிக்கப் பட்டிருந்தவர்களைக் கோரக் கொலைகள் செய்து தொலைத்தார்கள் அவர்களில் பலர்தான் பிரித்தானியச் செய்தியில் காட்டப்பட்டவர்கள் என்றும் கொலை செயபவர்கள் இராணுவ உடைபோட்ட புலிகள் என்றும் விடயமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்தப் படத்தில் கொலை செய்யப்படும் ஒரு தமிழர் தாடியுடன் இருக்கிறார். புலிகள் தாடி வைப்பதில்லை என்பது பலிகள் பற்றி நன்கு தெரிந்த குழந்தைகளுக்கும் தெரியும்.
அத்துடன் அந்தத் தாடி வைத்த மனிதர் 'புளொட'; இயக்க்ததைச்சேர்ந்த 'பாருக்'; என்ற பேர்வழியாகவிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. தங்களின் எதிரிகளை எப்படியெல்லாமேர்
கொலை செய்த புலிகள் இப்போது தாங்கள் கொலை செய்த அப்பாவித் தமிழர்களைப் 'புலிகள்'என்று பிரசாரம் செய்து பணம் பறிக்கிறார்கள. இதைப் பல தமிழர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.
'தாங்கள் செய்த கொலையைச் சிங்கள மொழியை 'டப்' பண்ணிப்போட்டு உலகை ஏமாற்றலாம் ஆனால் எங்களை ஏமாற்ற முடியாது' என்று பல தமிழர்கள் குமுறுகிறார்கள்.
இந்தப் படத்துக்குச் சிங்கள மொழி பேசி டப்பிங் செய்த பேர்வழி கெதியில் அகப்படுவார் என்று எதிர்பாhர்க்கப்படுகிறது.
இன்று, எப்படியும் இலங்கை அரசாங்கத்தை வீழ்த்தப் பல சக்திகள் ஒன்று திரண்டிருக்கின்றன. இவ்வளவு காலமும் போர் நடந்தால் அந்த அழிவில் கோடி சேர்த்த புலிபாதகர்கள்; இன்று தங்கள் கடன் அடைக்கப் பல வழிகள் மூலம் உழைக்கப் பார்க்கிறார்கள். பிரித்தானியச் செய்தி நூற்றுக்கணக்கில் கொப்பி பண்ணப்பட்டு விற்பனையாகிறது என்றம் சொல்லப் படுகிறது;. இனி இப்படி எத்தனையோ படங்கள் வரும், அதிலும் மாற்று இயக்கத்துப் பெண்களுக்குப் புலிகள் செய்த கொடுமைகளை, இலங்கை இராணுவம் அகதி முகாமிலிருக்கும் தமிழ்ப் பெண்களுக்குச் செய்வதாகச் சொல்லிப் பல செய்திகள் விரைவில் வரும் என்றும் இலங்கையில் பேசிக்கொள்கிறார்கள். புலிகள் எப்படியும் தமிழரை ஏமாற்றிப்பிழைக்கலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது இன்னும் பல தமிழருக்கு விளங்காமலிருப்பது பரிதாபமான விடயமாகும்.
அருந்தா-
தேணி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment