கே.பியின் உதவியாளர் ஆனந்தன் வெளிநாடொன்றில் வைத்து கைது ?
புலிகளின் முக்கியஸ்தரான கே.பியின் உதவியாளரான ஆனந்தன் என்பவர் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் வெளிநாடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு ஆனந்தன் கைது செய்யப்பட்ட நாட்டின் பெயரை வெளியிட முடியாதென அதிகாரிகள் தெரிவித்தனர்.
கே.பியிடமும் ஆனந்தனிடமும் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை பற்றியும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது புலிகளுக்கு முகவர்களாகச் செயற்பட்ட சார்ள்ஸ் ஞானக்கோன், ஜயந்த ஞானக்கோன் ஆகிய இரு சகோதரர்கள் பற்றியும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்சமயம் சார்ள்ஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலியாவிலும், ஜயந்த ஞானக்கோன் கலிபோர்னியாவிலும் இருக்கின்றனர் என்று தெரிகிறது.
இப்படி அந்த சிங்கள நாளிதழ் தனது செய்தியில் மேலும் தெரிவித்திருந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment