கடனுக்காக 13 வயது சிறுமிக்கு 75 வயது வயோதிபருடன் திருமணம்
கடனை மீளத்திருப்பிச் செலுத்த டியாத தந்தையொருவர், கடன் கொடுத்த 75 வயது வயோதிபருக்கு தனது 13 வயது மகளைத் திருமணம் செய்துவைத்த சம்பவம் தென் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.
பஸல் பிராந்தியத்திலுள்ள பனிமோர்தோன் கிராமத்தைச் சேர்ந்த அஸார் பெபாரி (Azhar Bepari), கடந்த மே மாதம் அயிலா புயல் கிராமத்தைத் தாக்கிய போது 59 அமெரிக்க டொலர் (4,000 takas) பெறுமதியான பணத்தை, வட்டிக்கு பணம் கொடுப்பவரான லொக்மான் சிக்டடமிருந்து (Lokman Shikder) கடனாகப் பெற்றிருந்தார்.
எனினும் நான்கு பிள்ளைகளின் தந்தையான அஸாரால் கடன் பணத்தை உரிய தவணையில் செலுத்த முடியாது போனது.
இந்நிலையில் அவர் தனது மகளான அக்ஹினூரை லொக்மானுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
லொக்மானின் முதல் மனைவியான ஆயிஷா பீபீ இத்திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெவித்துள்ளதுடன், சிறுமியின் எதிர்கால வாழ்வை சீரழித்த தனது கணவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொலிஸில் றைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள லொக்மானைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment