தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வணக்கம்!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேல் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டதுடன் மிக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற நாங்கள் மிகுந்த பணிவுடன் எழுதிக் கொள்வது.
ஐயா, போர் என்ற வாழ்வியலில் இருந்து இலங்கைத் தீவின் சகல இன மக்களும் விடுபட்டு ஒரு அமைதியான சுகமான நிலையில் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் கூட யுத்தத்தின் வடுக்களாக அரசியல் கைதிகள் என்கிற பெயருடன் நாங்கள் மட்டும் சிறையில் துயருற்றுக் கொண்டிருக்கிறோம். எங்களை இத் துயர் வாழ்விலிருந்து மீட்டெடுக்க யாருமற்ற நிலையில் இருக்கிறோம். எங்கள் துயர் வாழ்வின் அகோர வலியினை உணர்ந்து எங்களுக்கு உதவி புரிய யாருமில்லை. எங்கள் விடுதலை விடயம் பற்றி தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகத் தெயவில்லை. எங்களின் உண்மையான நிலைவரத்தை தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்குமாயின் தங்கள் கருணையின் கீழ் விடுதலை கிடைத்திருக்குமென நம்புகிறோம். இன்று இலங்கைத் தீவில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறோம்.காலத்தின் தவறிழைப்புக்கள் தண்டனைக்குய குற்றமாக இருப்பதற்கான காலத்தின் மாறுதல்களும் உங்களைப் போன்ற பெயவர்களின் நேயங்களும் அவற்றை மன்னித்து விடுமென நம்புகிறோம். அறியாமையும் தெளிவின்மையும் தவறிழைப்பிற்கான காரணங்களாகி விடுகின்றன. தெயாமல், அறியாமல் செய்த பிழைகள் மன்னிப்பிற்குரியவை.
தமிழ் அரசியற் கைதிகளாகிய நாங்கள் மிக நீண்டகாலமாக அவசர கால, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். 631 இற்கும் அதிகமானோர் 35 வருடங்களுக்கு வழக்கு தொடரப்படாமலும், சிலருக்கு 1012 வருடமாக விசாரணை என்ற பெயலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் 5 வயதிற்கு மேற்பட்டவர்களும் திருமணமானவர்களும் அதிகமாக உள்ளனர். இவர்கள் 810 வருடங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவற்றில் ஒரு சிலரது விரபங்களை இங்கு தருகிறோம்.
இளம் பராயத்தில் கைது செய்யப்பட்டு தங்களது இளமைக் காலங்களை கரைய விட்டு 10, 12 வருடங்கள் கண்ணீருடன் வாழ்ந்து வரும் சிலர்:
1. நல்லரெத்தினம் சிங்கராசா
வயது 35.
நாவற்காடு, மட்டக்களப்பு,
கைது செய்யப்பட்ட திகதி: 1999.7.1
சிறை இல Y 14263
35 வருட கால தண்டனை
2. செல்லப்பிள்ளை மகேந்திரன்
வயது: 32 முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
கைது செய்யப்பட்ட திகதி 1993.04 சிறை
இல Y 13139
ஆயுள் தண்டனை
3. தங்கவேல் சிவபாலன்
வயது: 36
சின்ன ஊறணி,
மட்டக்களப்பு
கைது செய்த திகதி : 1995.08.03
சிறை இல: 024212 15 வருட கால சிறை
04. சண்கம் ஆனந்தராஜ்
வயது: 30
ரக்கல எஸ்ரேட் மொனராகலை
சிறை இல: M 2389
கைது செய்த திகதி 1998.09.09
17 வருட கால சிறை.
05. சுப்பையா சிறிதரன்
வயது 32.
புத்தளம் ரோட், பாலாவி.
சிறை இல 06.
கைதுசெய்யப்பட்ட திகதி 1996
(விசாரணையில்)
06. சவத்து லோகநாதன்
வயது :38 பளை,
யாழ்ப்பாணம்.
சிறை இல: 232
கைது செய்யப்பட்ட திகதி: 1996.08.02
(விசாரணையில்)
07. குணதாஸ் அஜித்குமார்
வயது: 31 (2 பிள்ளைகள்)
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்,
சிறை: 3817 (விசாரணையில்)
08. அம்பலவாணன் ஜெயபாலன்
வயது: 48 பாண்டியன் குளம்
வவுனியா சிறை 4656
கைது செய்த திகதி: 2000.7.
(விசாரணையில்)
09.சோமசுந்தரம் சிவனேஸ்வரன்
(உயர் இரத்த அழுத்தம், சயரோகம், ஆஸ்துமா)
வயது 57.
ஊரேழு,
யாழ்ப்பாணம்.
கைது செய்த திகதி : 1998.7.24
சிறை இல: 5847
(விசாரணையில்)
10.சந்திர ஐயர் ரகுபதி சர்மா
(நீழிவு, இருதய நோய்)
வயது : 50
யாழ்ப்பாணம்
கைது செய்யப்பட்ட திகதி 2000.2.9
(விசாரணையில்)
11. வைத்தியலிங்கம்
(உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா)
வயது 53 பெரியபோர தீவு
கைது செய்த திகதி: 2000.9.27
சிறை இல 7775
(விசாரணையில்)
12. ஆறுகம் கனகரெட்னம்
(உயர் இரத்த அழுத்தம்)
வயது 63
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
கைது செய்யப்பட்ட திகதி 1991.1.14
(35 வருடகால சிறை)
சிறை இல : Y 14263
13. முத்தையா சகாதேவன்
(நீரிழிவு) வயது: 52
கிருலப்பனை
(விசாரணையில்)
14. ரோபேட் மக்சிலன் (1 குழந்தை)
வயது 40
குருநகர்,
யாழ்ப்பாணம்
சி. இல 221
(விசாரணையில்)
15. செல்வரத்தினம் சிறிதரன்
வயது 45,
கூமாங்குளம்
வவுனியா
கைது செய்யப்பட்ட திகதி 2001.05.16
சி. இல: 669
(விசாரணையில்)
மேலே, குறிப்பிடப்பட்டவர்கள் உதாரணங்களாகும்.
3 - 15 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண் டனை அனுபவித்து வருபவர்களின் விபரங் களை தங்களிடம் சேர்ப்பதற்காக பல்வேறு வழிகளிலும் நாங்கள் எடுத்த முயற்சிகள் பயனற்று போய்விட்டன. எங்களது விடயத்தில் தன்னால் இயன்றளவு முயற்சிகளை கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் உங்களிடம் தரவுகள் சேர்ப்பதற்காக எடுத்து வருகிறார்.
தமிழ் கூட்டமைப்பிடம் இதுபற்றி அறிவித்திருக்கிறோம். இளம் பராயத்திலிருந்தே சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எங்களது எதிர்காலம் பற்றியும் பிரச்சினைகள் பற்றியும் புரிந்துணரக் கூடிய தங்களிடம் தீர்வினை எதிர்பார்த்து நிற்கின்றோம். எங்களுக்கு உடல், உள தியான துன்பங்கள் ஏராளம். நீண்ட கால சிறையிருப்பின் காரணமாக குடும்ப உறவு களை பிரிந்து வேதனை உணர்ச்சியோடு வாழ் கிறோம்.
இம்மடல் ஊடகங்கள் வழியாக தங்கள் கரம் எட்டுகின்ற போது எங்களது இந்த வாழ்க்கையி லிருந்து விடுதலை பெற்று புது வாழ்வைத் தேடித்தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங் கள் மீது கருணை கொண்டு தமிழ் அரசியல் கைதிகளாகிய எங்களுக்கு தங்களின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கேட் டுக் கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
பணிவுடன்
தமிழ் அரசியல் கைதிகள்
0 விமர்சனங்கள்:
Post a Comment