ஒசாமா பின்லேடன் சகோதரர் மரணம்!
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் சகோதரர் தாபெத் பின்லேடன். சவுதி அரேபியாவில் வசித்து வந்தார். அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்து விட்டார். இந்த தகவலை பின்லேடன் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் தாபெத் பின்லேடனின் மறைவு குறித்த செய்தியை ஹஅல்-ரியாத்ஹ பத்திரிகையிலும் முழு பக்க அறிவிப்பாக வெளியிட்டுள்ளனர். தாபெத் பின்லேடனின் இறுதி சடங்குகள் ரியாத் நகரில் நேற்று நடந்தது.
தாபெத் பின்லேடன் இறந்ததற்கான காரணம் குறித்தோ, அவருடைய வயது குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. பின்லேடனின் தந்தை முகமது பின்லேடனுக்கு பல்வேறு மனைவிகள் மூலமாக 54 குழந்தைகள் பிறந்தனர் என்பதும் அவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment