கரும்புலிகள் வெடி வெடித்து, காடு நிலம் ஊடறுத்து, பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாரே எம் தலைவர்!?....
மரணித்த நிலையில் இங்கே மல்லாந்து கிடப்பது யார்?... கடற்புலிகளின் தளபதி சூசைதானே! நன்றாக உற்றுப்பாருங்கள்….. இது இப்படி இருக்கையில் இப்பொழுது புதிதாக ஒரு பாடல் புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.
தேனிசை செல்லப்பாவின் குரலில் வெளி வந்த எம் தலைவர் சாகவில்லை என்ற அந்த பாடலில,; கரும்புலிகள் வெடி வெடித்து. காடு நிலம் ஊடறுத்து, பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாரே எம் தலைவர் என்று சொல்லப்படுகின்றது.
படத்தை இன்னொரு முறை பாருங்கள். இதில் உள்ள உண்மைத்தன்மைகளை வாசகர்களாகிய நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
ஒரு வரலாற்றப்பதிவு…. 1986 இல் நடந்த சம்பவம்!.... திக்கம் சந்திக்கு அருகில் உள்ள கடல் வழியாக கடற்படையினர் ஊர்மனைக்குள் நுiழைவதற்கு முயற்சி எடுத்தக்கொண்டிருந்தனர்.
கடற்படையினர் கடற்கரை ஓரமாக வந்து தரையிறங்கி விட்டனர். ஆனால் போராளிகளால்
கடற்படையினர் மீது தாக்குதல் நடத்த முடிந்திருக்கவில்லை.
கடற்படையினர் பருத்தித்துறை நோக்கி செல்லும் அந்த பிரதான வீதிக்கு அப்பால் நின்றனர்.
போராளிகள் அந்த வீதிக்கு மறு கரையில் நின்று தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தனர்.
அந்த பிரதான வீதி உயரமானது… வீதிக்கு இரு புறமும் பள்ளம்…. ஆதனால் போராளிகளால் கடற்படையிரை இனம் கண்டு குறி வைத்து தாக்குதல் நடத்த முடிந்திருக்கவில்லை.
அந்த போர் முனையில் புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினரும் நின்றிருந்தனர். கடற்படையினரை இரு தரப்பும் இணைந்து நின்றும் துரத்தியடிக்க முடிந்திருக்வில்லை.
ஒரேயொரு வழி மட்டும்தான் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளின் மோட்டார் தாக்குதல்தான் இதற்கு தகுந்த வழி என்று சிந்தித்தனர்.
உடனடியாகவே அந்த கள முனையில் நின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகள் தங்களது வஷேட மோட்டார் படையணிக்கு தகவல் அனுப்பி விட்டு காத்திருந்தனர். இது சூசைக்கு தெரிந்து விட்டது.
அப்போது புலிகளின் வடமராட்சி அமைப்பாளராக இருந்தவர் சூசை. அந்த கள முனையிலும் புலிகளை சூசையே வழிநடத்திக்கொண்டிருந்தார்.
ஈ.பி.ஆர்.டில்.எவ் போராளிகள் வந்து சேர்வதற்குள் சூசை ஒரு காரியம் ஆற்ற துணிந்தார்.
அப்போது பொதுவாக புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதையோ, அதனால் பொது மக்களிடம் வரவேற்பை பெறுவதையே விரும்புவதில்லை.
ஆகவே காரியத்தில் தாம் முந்திவிட வேண்டும் என்று கருதி சூசை தயாரானார். ஒரு எல்.எம்.ஐp துப்பாக்கியோடு மிகவும் உரு மறைப்போடு அங்கு நின்றிருந்த தென்னை மரம் ஒன்றில் ஏறினார்.
பிரதான வீதிக்கு மறு கரையில் மறைந்து பாதுகாப்பு நில எடுத்திருந்த கடற்படையினரை அப்போது சூசை பார்க்க கூடியதாக இருந்தது. சூசையின் எல்.எம்.ஐp சட சடத்தது.
எத்தனை கடற்படையினர் கொல்லப்பட்டார்கள் என்று தெரியாது. ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் கடற்படையினர் பின்வாங்கி சென்று விட்டனர்.
அதன் பினனர்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளின் மோட்டார் படையணி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தது.
சூசையின் வீரம் நுட்பமாக அந்த கள முனையில் விளையாடியது. சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு காலத்தில் எல்லோராலும் ஏற்றக்கொள்ளப்பட எமது நீதியான ஆயுதப்போராட்டத்தில் சூசைக்கு இருந்த பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.
புலிகளால் அழித்தொழிக்கப்பட்ட சக இயக்கப்போராளிகளின் துயரங்களை இங்கு குறிப்பிடுவதற்கு அப்பால், அதற்கு சூசையும் துணை போனவர் என்பதற்கு அப்பால்,
எதிரிக்கு எதிராக தூக்க வேண்டிய ஆயுதங்களை சகோதர போராளி அமைப்புகள் மீது
புலிகள் திருப்பியிருந்தார்கள் என்பதற்கு அப்பால், இது போன்ற வரலாற்றுப்பதிவு
மரணித்த நிலையில் மல்லாந்து கிடக்கும் சூசையின் சடலத்தை கண்டதும் நினைவிற்கு வந்தது.
வீரத்தை விவேவகமாக பயன்படுத்தியிருந்தால் இந்த விபரீதங்கள் நடந்திருக்காது.
அதற்காக விவேகத்தை நிராகரித்து, வீரத்தை வணங்கிய அனைவரும் வருத்தப்பட்டே
ஆக வேண்டும்.
கொல்லப்பட்ட ஒருவரை உயிரோடு இருப்பதாக பரப்புரை செய்வது கொல்லப்பட்டவருக்கு இழைக்கின்ற துரோகம். கொல்லப்பட்டவருக்கு அஞ்சலி செலுத்தும் கடமையையே அவர்கள் தவற விட்டவர்கள் என்று அர்த்தம்.
யாருடைய மரணத்திலும் யாரும் மகிழ்ச்சி கொள்ள முடியாது.
இதை புலிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒவ்வொரு காலச்சூழலிலும்
உணர்ந்திருக்க வேண்டும்.
சூரிய புத்திரன்!
நன்றி: எங்கள் தேசம்
0 விமர்சனங்கள்:
Post a Comment